
ஜகர்தா:
இந்தோனேசியா தலைநகர் ஜகர்தாவில் இன்று பல இடங்களில் குண்டு வெடிப்பு சம்பவங்கள் நடந்துள்ளது. இதில் 3 பேர் பலியாகியுள்ளனர்.
குண்டு வெடிப்பு சம்வங்களில் ஒரு இடத்தில் மனித வெடிகுண்டு தாக்குதல் நடந்துள்ளது. மேலும், அங்கு தற்போது பாதுகாப்பு படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்து வருகிறது. 6 இடத்தில் தாக்குதல் நடந்திருப்பதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
ஒரு தாக்குதல் ஸ்டார் பக்ஸ் காபி கடையிலும், சரினா மஹால் என்ற ஷாப்பிங் சென்டரிலும் நடந்துள்ளது. இந்த கடையில் ஜன்னல்கள் வழியாக வெடித்து சிதறியதை காண முடிந்தது. 10 முதல் 14 பேர் இந்த துப்பாக்கியால் சுட்டு வருகின்றனர். ஒருவர் மனித வெடிகுண்டாக மாறி தாக்குதல் நடத்தியுள்ளார் என இந்தோனேசியா போலீசார் தெரிவித்துள்ளனர்.
Patrikai.com official YouTube Channel