இந்திய ஊழியரை சவுதி முதலாளிஅடிக்கும் அதிர்ச்சி வீடியோ! ஆண்டுதோறும் கேரளாவைச்சேர்ந்தவர்கள் கூட்டம் கூட்டமாககண்களில் எதிர்பார்ப்புடன் அரபுநாடுகளுக்கு பயணம் மேற்கொள்வர்.அதிக சம்பளத்துடன் கூடிய சிறந்த பணிகிடைக்கும் என்று நம்பி இவர்கள்செல்வது வாடிக்கை. இப்படி சென்ற 3பேர் கொண்ட குழுவுக்கு நிலைதலைகீழாக மாறிவிட்டது.
அவர்களுக்கு ஏற்பட்ட அவல நிலையைஒரு வீடியோ க £ட்சி எடுத்துக்காட்டுகிறது. வாட்ஸ் அப் மூலம் இந்தவீடியோ வெளியாகியுள்ளது. இந்தகாட்சியில் ஒரு சவுதியை சேர்ந்தஉரிமையாளர் ஒரு தொழிலாளியைகுச்சியால் அடிக்கிறார். இந்தவீடியோவை சக ஊழியர் ஒருவர் தனதுசட்டை பாக்கெட்டில் செல் போனைமறைத்து வைத்து படம் பிடித்துள்ளார்.இந்த மூன்று பேரும் ஒரு பணியமர்த்தும்ஏஜென்சி அளித்த பொய்வாக்குறுதிகளை நம்பி இந்த பணியில்சேர்ந்தவர்கள். தற்போது அதன்உரிமையாளரால் அடித்து துன்புறுத்தும்நிலைக்கு ஆளாகி தவிக்கின்றனர்.
முட்டம் அருகில் உள்ள ஹரிபாத்பகுதியை சேர்ந்த இந்த ஊழியர்களானவிமல்குமார் (30), அபிலாஷ் கோபில (30),ஆலப்புழாவை சேர்ந்த பியூஜ்பாபு (26)ஆகிய 3 பேரும் மெக்கானிக் மற்றும்எலக்ட்ரிஷியன் வேலைக்கு என்றுஅழைத்துச் செல்லப்பட்டு, தங்கும் வசதிமற்றும் உணவு கூட இல்லாமல் செங்கல்சூழையில் பணி செய்ய விட் டுவிட்டனர்.உரிமையாளரின் டார்ச்சர் தாங்கமுடியாமல் 3 பேரும் அங்கிருந்து ஓடிவந்து கேரளாவை சேர்ந்த ஒருவரதுகடையில் தலைமறைவு வாழ்க்கைநடத்தி வருகின்றனர். பாஸ்போர்ட்டைபறித்து வைத்துள்ள சம்சாத் என்றஇடைத் தரகர் 10 ஆயிரம் ரியால்கொடுத்தால் தான் பாஸ்போர்ட்டைதிரும்ப தருவேன் என மிரட்டியுள்ளார்.
‘‘பாதிக்கப்பட்ட விமலுக்கு 2 வயதுகுழந்தை உள்ளது. வாட்டர் ஹீட்டர்மெக்கானிக். இவரது தந்தை சிறுவயதிலேயே இறந்துவிட்டார். குடும்பகஷ்டம் காரணமாக தான் அவரைசவுதிக்கு அனுப்பினேன்’’ என்று அவரதுதாய் ஓமனா கூறினார். பாதிக்கப்பட்டகுடும்பத்தினர் காயம்குளம் காவல்துறையின் உதவியை நாடியுள்ளனர்.பொய் வாக்குறுதிகளை அளித்துஇவர்களை சவுதி அழைத்துச்சென்றதில் ஆரத்துப்புழாவை சேர்ந்தவினோத்குமார் என்பவருக்கு தொடர்புஇருப்பதாக எழுந்த புகாரை காயம்குளம்போலீஸ் இன்ஸ்பெக்டர் உதயாபானுமறுத்துள்ளார்.
இது குறித்த தகவலும், வீடியோகாட்சியும் வெளியுறவுத் துறைஅமைச்சர் சுஷ்மா சுவராஜ் கவனத்துக்குகொண்டு செல்லப்பட்டது. ‘‘ வீடியோகாட்சிகளை பார்த்தேன். சவுதியில்உள்ள இந்திய தூதரகத்திடம் இருந்துஅறிக்கை கே £ரப்பட்டுள்ளது. போலீஸ்மூலம் அவர்களுக்கு பாதுகாப்புஅளிக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. தேவையானநடவடிக்கை எடுக்கப்படும்’’ என சுஷ்மாசுவராஜ் தனது டிவிட்டர் பக்கத்தில்தெரிவித்துள்ளார்.
வீடியோ