மும்பை

ந்திய அணி அனைத்து ஆசிய கிரிக்கெட் தொடர்க்ளிலும் இருதும் விலகுவதாக பி சி சி ஐ அறிவித்துள்ளது

 

சமீப காலமாக இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பதட்டங்கள் அதிகரித்துள்ள நிலையில், மகளிர் ஆசிய கோப்பை உட்பட இனி ஆசிய கிரிக்கெட் கவுன்சில் நடத்தும் அனைத்து வகையான தொடர்களிலிருந்தும் விலக பிசிசிஐ முடிவு செய்துள்ளது

அடுத்த மாதம் இலங்கையில் நடைபெற உள்ள மகளிர் ஆசியக் கோப்பை தொடரிலிருந்தும் இந்தியா விலகுவதாக ஆசிய கிரிக்கெட் கவுன்சிலுக்கு பிசிசிஐ தகவல் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

ஆசிய கிரிக்கெட் கவுன்சிலுக்கு தற்போது பாகிஸ்தானின் உள்துறை அமைச்சரும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவருமான மொஹ்சின் நக்வி தலைமை தாங்குகிறார். இதுதான் இந்தியாவின் விலகலுக்கு காரணமாக உள்ளது.

பிசிசிஐ

“இது நாட்டின் உணர்ச்சி என்றும், ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் இருக்கும்போது அதில் தங்களால் விளையாட முடியாது”

என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது.