டெல்லி: கடந்த 17 ஆண்டுகளில் இந்தியாவில் புகை பிடிப்போரின் எண்ணிக்கை 36 சதவீதம் உயர்ந்துள்ளது.
இந்திய வம்சாவளியை «ச்ந்த டோரண்டோ பல்கலைக்கழக பேராசிரியர் பிரபாத் ஜா என்ற ஆராய்ச்சியாளர் ஒருவர் கடந்த 1998ம் ஆண்டு முதல் புகை பிடிப்போர் தொடர்பான ஆய்வை மேற்கொண்டு வந்தார். அதன் விபரங்களை சமீபத்தில் வெளியிட்டார். அதன் விபரம்:
15 முதல் 69 வயது வரையிலான புகை பிடிக்கும் ஆண்களின் எண்ணிக்கை 29 மில்லியன் உயர்ந்தள்ளது. இது 36 சதவீதமாகும். 1998ம் ஆண்டில் 79 மில்லியன் என்ற எண்ணிக்கையில் இருந்த எண்ணிக்கை 2015ம் ஆண்டில் 108 மில்லியனாக உயர்ந்துள்ளது. ஆண்டுக்கு 1.7 மில்லியன் புகை பிடிக்கும் ஆண்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.
2010ம் ஆண்டில் புகை பிடித்ததால் 10 சதவீதம் பேர் அதாவது, 1 மில்லியன் பேர் இறந்துள்ளனர். இதில் 30 முதல் 69 வயது வரையிலான ஆண்கள் 70 சதவீதம்.
மக்கள் தொகை அதிகரிப்பு காரணமாக 15 முதல் 69 வயது வரையிலான புகை பிடிப்போரின் எண்ணிக்கை 1998ம் ஆண்டில் இருந்த 27 சதவீதத்தில் இருந்து 2010ம் ஆண்டில் 24 சதவீதமாக குறைந்தது.
இந்தியாவின் பாரம்பரியத்தை கொண்ட பீடியின் இடத்தை சிகரெட் சிறிய அளவில் கைப்பற்றிவிட்டது. உயர் வருமான பிரிவை சேர்ந்த இந்தியர்கள் சிகரெட்டுக்கு மாறினர்.
2015ம் ஆண்டில் 15 முதல் 69 வயது வரையிலானவர்கள் பீடி மற்றும் சிகரெட் பிடிப்படில் கிட்டத்தட்ட ஒரே அளவில் இருந்தனர். அதாவது 61 மில்லியன் பேர் சிகரெட்டும், 69 மில்லியன் பேர் பீடியும் பிடித்துள்ளனர்.
15 முதல் 29 வயது வரையிலான புகை பிடிக்கும் ஆண்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.