இஸ்லாமாபாத்:

பாகிஸ்தானை பற்றி அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியாவின் குரலில் விமர்சித்துள்ளார் என்று பாக். அமைச்சர் குற்றம்சாட்டியிருக்கிறார்.

“பயங்கரவாதத்தை ஒழிப்பதற்காக பாகிஸ்தானுக்கு, கடந்த, 15 வருடங்களில்  அமெரிக்க அரசுகள் முட்டாள்தனமாக, 2.10 லட்சம் கோடி ரூபாய் நிதியுதவி செய்துள்ளன.  ஆனால் நடவடிக்கை எடுக்காத பாகிஸ்தான்,  பொய் சொல்லி, பயங்கரவாதிகளுக்கு புகலிடம் அளித்து வருகிறது. இனி  பாகிஸ்தானுக்கு  நிதி உதவி அளிக்க மாட்டோம்” என்று, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்தார்.

இவரது பேச்சுக்கு  பாக். தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் டிரம்ப் அறிக்கை குறித்து  பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு தொடர்பாக அந்நாட்டு பாராளுமன்ற கமிட்டி கூட்டம் நடந்தது. இதில் கலந்து கொண்டு பாக். வெளியுறவு அமைச்சர் குவாஜா ஆசிப் பேசியதாவது:

“ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதத்தை ஒடுக்கும் விஷயத்தில் அமெரிக்கா தோல்வி அடைந்ததற்கு  பாகிஸ்தானை பலிகடாவாக்க முயல்கிறது.  அமெரிக்க அதிபர் டெனால்ட் டிரம்ப் உள்ளிட்ட அந்நாட்டு தலைவர்களின் விமர்சனம் உண்மைக்கு முரணாக, இந்தியாவின் குரலில் உள்ளன” என்றார்.