இங்கிலாந்து, ஐரோப்பிய நாடுகளுக்கான விசா :  வீட்டிலிருந்தே பெறும் வசதி
 
இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கான விசாவினை  வீட்டிலிருந்தே விண்ணப்பித்து பெற முடியும்.
images
ஆன் லைன் மூலம் பல நாடுகளுக்கான விசா வழங்கும் அவுட்சோர்ஸிங் சேவையில் ஈடுபட்டுள்ள   விஎஃப்எஸ் குளோபல் நிறுவனத்திடம் இந்தப் பணி ஒப்படைக்கப்ட்டுள்ளது. இதன்மூலம் விசாவுக்கு விண்ணபிப்பது, பயோமெட்ரிக் முறையில் பதிவு செய்வது உள்பட அனைத்து சேவைகளையும் விஎஃப்எஸ் நிறுவனம் வழங்குகிறது. அதற்கான சேவைக் கட்டணமும் வசூலிக்கப்படுகிறது.
 
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் போன்ற நாடுகளில் இது போன்ற  வசதி ஏற்கனவே கிடைக்கிறது. ஹங்கேரி மற்றும் டென்மார்க் போன்ற நாடுகளுக்கும் இதுபோன்ற சேவைகள் இன்னும் ஒரு சில மாதங்களுக்குள் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  இதனால் பெரிய எண்ணிக்கையில் இங்கிலாந்துக்கு செல்லும் இந்தியர்களுக்கு பெரும் உதவியாக இருக்கும்.
2015 ஆம் ஆண்டில் 85,403 இந்தியர்களுக்கு இங்கிலாந்துக்கான நுழைவு அனுமதி விசா கிடைத்தது. அதே ஆண்டில் 93,076 சீனர்கள் இங்கிலாந்துக்குப் பயணம் செய்து  முதல் இடத்தில் உள்ளனர். மாணவர்கள், நிபுணத்துவ பணியாளர்கள், வேலைக்கு விசா வைத்திருப்பவர்கள் என அனைவரும் பிரிட்டனுக்குள் நுழையும் முன் நுழைவு அனுமதி விசா பெறவேண்டும்.
vfs-globalஇங்கிலாந்து அரசு விசா விண்ணப்பக் கட்டத்தை  மார்ச் மாதம் முதல் உயர்த்தியுள்ளது. பொருளாதார வளர்ச்சிக்கு மிகவும் நெருக்கமான தொடர்புடைய தொழிலாளர்கள் மற்றும் மாணவர்களுக்கான விசா கட்டணம் 2% அதிகரித்துள்ளது. ஆனால் அதேவேளை சுற்றுலா விசா, குடியிருப்பு விசா மற்றும் தேசிய கட்டணம் ஆகியவற்றுக்கான விண்ணப்பக் கட்ட்ணம் 25%  உயர்த்தப்ப்ட்டுள்ளது.
தங்கள் தொழிலாளர்களை  நிறுவனங்களுக்கிடையே பரிமாற்றம் செய்து கொள்வதற்கான விசா கட்டணம் 1151 ஸ்டெர்லிங் பவுண்டுகளாக உயர்த்தப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் உள்ள பெரும்பாலான இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் இந்த விசாமுறைதான் பயன்படுத்தப்படுகிறது.
ஆறு மாதங்களுக்கான சுற்றுலா விசா கட்டணம் 85லிருந்து  87 ஸ்டெர்லிங் பவுண்டுகளாக உயர்த்தப்பட்டுள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கான சுற்றுலா விசா கட்டணம் 6 பவுண்டுகள் அதிகரிக்கப்ப்ட்டு 330 ஸ்டெர்லிங் பவுண்டுகளாக  நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முதல் 5 ஆண்டுகளுக்கான சுற்றுலா விசா கட்டணம் 588 லிருந்து 600 பவுண்டுகளாக  அதிகரிக்கப்பட்டுள்ளது. 10 ஆண்டுகளுக்கான சுற்றுலா விசா கட்டணம் 15 பவுண்டு அதிகரிக்கப்பட்டு 752 ஸ்டெர்லிங் பவுண்டுகளாக அதிகரிக்கப்பட்டுள்ளது.