கலால் வரி ஒரு சதவீதம் விதித்ததால் தங்கம் விலை ஏறிடும் மக்கள் கஷ்டப் படுவாங்க என்பது நகைகடை அதிபர்கள் சொல்லும் காரணம் .
ஒரு லட்சம் ரூபாய்க்கு நகை வாங்கினால் ஆயிரம் ரூபாய் வரி செலுத்த வேண்டும். அதனால் மக்கள் பில் கேட்பார்கள்.துண்டு சீட்டு போட்டு காசு வாங்க முடியாது.
அப்படியானால் கலால் வரியினை கணக்கிட்டு அவர்களுக்கு வருமான வரி கட்ட வேண்டி வரும். அதனால்தான் இவர்கள் கூப்பாடு போடுகின்றனர். மத்தபடி மக்கள் கஷ்டம் காரணமில்லை.
மக்களை கஷ்ட படுத்தகூடாதுன்னா செய்கூலி,சேதாரம் 10%-14%போடுவதை விடுங்க..அப்படி சேதாரம் போட்டாலும் அந்த சேதாரமான தங்க துகள்களை பொட்டலம் போட்டு எங்க கிட்ட தந்துடுங்க..சேதாரமான தங்கத்தையும் வைத்து கொள்வார்களாம்.உங்க கிட்ட நாங்க ஏமாந்து தரும் சேதாரமான தங்கத்துக்கு பணமும் வாங்கிப்பீங்களாம்..
என்னங்கப்பா இது ?.
பத்து பவுன் வாங்கினா ஒன்றரை பவுனை சேதாரமா வாங்குற உங்களை விட மத்திய அரசு ஒன்றும் எங்களை வதைக்கவில்லை.
எங்க மேல அவ்வளவு அக்கறையின்னா நீங்களே அந்த ஒரு சதவீதத்தினை செலுத்துகிறோம்னு சொல்லுங்களேன்.
தங்க நகை ஆசாரியை முதலில் கஷ்டம் இல்லாம நல்லா வாழ வையுங்க.
மக்களே கலால் வரி செலுத்திய சீட்டை கேட்டு வாங்குங்கள்..
இவர்கள் தரும் சிறு தள்ளுபடிக்காக துண்டு சீட்டுக்கு பணம் கொடுக்காதீர்கள்.இவர்களுக்கு கிடுக்கி பிடி போடும் இந்த கலால் வரி …அதனால் தான் இத்தனை நாள் கடையடைப்பை நடத்துகின்றனர்.
திரும்ப முதல் வரியை படிங்க…
மோடியண்ணே நாங்க வரி செலுத்தி நகை வாங்க ரெடி.
நீங்க கலால் வரிய நீக்காதிங்க…
இப்படின்னு மக்கள் பேச்சு…
… சிவா