
அ.தி.மு.க. மகளிர் அணி இணை செயலாளராக விஜிலா சத்தியானந்த் நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை:
அ.தி.மு.க. பொது செயலாளரும், முதல்–அமைச்சருமான ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
நெல்லை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. மகளிர் அணி செயலாளரும், மாநிலங்களவை அ.தி.மு.க. கொறடாவுமான விஜிலா சத்தியானந்த் அ.தி.மு.க. மகளிர் அணி மாநில இணை செயலாளர் பொறுப்பில் இன்று முதல் நியமிக்கப்படுகிறார். கட்சி தொண்டர்கள் இவருக்கு முழு ஒத்துழைப்பு வழங்கும்படி கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு ஜெயலலிதா கூறியுள்ளார்.
Patrikai.com official YouTube Channel