சென்னை ஓமந்தூரர் அரசினர் தோட்டத்தில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு அரசின் பன்னோக்கு உயர் சிறப்பு சிகிச்சை மருத்துவமனையில் மூளையில் ஏற்படும் இரத்தகட்டு (ஹெமரேஜ் / ஹெமடோமா), புற்றுநோய் கட்டி (கான்சர்), நீர்க்கட்டி (சிஸ்ட்), சீழ்கட்டி (ஆப்சஸ்) போன்றவற்றிற்கு மண்டையோட்டியை உடைக்காமல், ஒரு சிறிய துளை மட்டும் போட்டு, நவீன முறையில் நுண் துளை முப்பரிமாண அணுகு முறை (ஸ்டிரியோடாக்சி Stereotaxy) அறுவை சிகிச்சை செய்யப்பட்டு வருகிறது.
இந்த முறையில் நோயாளிக்கு அறுவை சிகிச்சையின் போது அதிக அளவு இரத்தப்போக்கு ஏற்படாததால் இரத்தம் செலுத்த தேவையில்லை. அதே போல் நோயாளிக்கு மயக்க மருந்து அளிக்க தேவையில்லை. மரத்து போகும் ஊசி மட்டும் போதும். அறுவை சிகிச்சை நடைபெறும் நேரம் கூட நோயாளி பேசிக்கொண்டிருக்கலாம். அறுவை சிகிச்சை முடிந்த உடன் நோயாளியால் நடக்க கூட முடியும்.
தனியார் மருத்துவமனைகளில் பல லட்சங்கள் செலவு பிடிக்கும் இந்த நுண் துளை முப்பரிமாண அணுகு முறை (ஸ்டிரியோடாக்சி Stereotaxy) அறுவை சிகிச்சைகள் சென்னை ஓமந்தூரர் அரசினர் தோட்டத்தில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு அரசின் அரசு பன்னோக்கு உயர் சிறப்பு சிகிச்சை மருத்துவமனையில் முற்றிலும் இலவசமாக மாண்புமிகு முதல்வரின் காப்பீட்டு திட்டத்தில் செய்யப்படுகிறது.
இதே போல் முதுகெலும்பு முறிவு, முதுகுதண்டில் ஏற்படும் சவ்வு விலகுதல், எலும்பு விலகுதல் போன்ற பிரச்சனைகளுக்கும் நுண்துளை மூலம் நவீன கருவிகள் (Neuro Endoscopy Surgery) கொண்டு அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது
மூளையில் ஏற்படும் இரத்த கசிவு, மூளை இரத்த நாளங்களில் ஏற்படும் விரிவு, வீக்கம், வெடிப்பு, (Aneurysms, AVM Arteriovenous Malformation, ) ஆகிய நோய்களுக்கு இங்கு நுண் துளை சிகிச்சை மற்றும் கபால அடிபுற (ஸ்கல் பேஸ்) நுண்ணோக்கி (மைக்ரோஸ்கோபிக்) அறுவை சிகிச்சை ஆகியவை செய்யப்பட்டு வருகின்றன.
இது வரை 500க்கும் மேலான வெற்றிகரமான அறுவை சிகிச்சைகள் நடைபெற்றுள்ளன. அனைத்து சிகிச்சைகளுக்கும் முதல்வரின் விரிவான காப்பீடு திட்டத்தின் கீழ் முற்றிலும் இலவசமாக செய்யப்படுகின்றன
Kishore K Swamy https://www.facebook.com/kishore.kswamy?fref=ts