
ஈராக் போரின் போது, அமெரிக்கப் படையினர், பெண்களை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதாக ஏற்கெனவே பல செய்திகள் ஆதாரங்களுடன் வெளியானது.
இப்போது, அம்மாக்கள் எதிரிலேயே சிறுவர்களை, அமெரிக்க படையினர் பலாத்காரப்படுத்திய தகவல் ஆதாரத்துடன் வெளியாகி உள்ளது.
ஈராக்கில் உள்ளஅபு காரிப் என்ற இடத்தில் அமெரிக்க சித்தரவதைக் கூடம் இருந்தது. இங்குதான் அம்மாக்கள் எதிரிலேயே சிறுவர்களை அமெரிக்க படையினர் பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தியதாக ஆதாரத்துடன் செய்தி வெளியாகி உள்ளது.
இந்தக் கொடுமையை அமெரிக்க படையில் இருந்த பெண்களே ரசித்து படம் பிடித்ததாகவும் ரசித்ததாகவும் கவுண்டர்கரண்ட்ஸ் என்ற இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த வீடியோ உலகெங்கிலும் பெரும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தி வருகிறது. சமூகவலைதளங்களில் பலரும் அமெரிக்க படையினரை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். இதையடுத்து, இந்த விவகாரம் வெகுஜென ஊடகங்களில் வெளியாகமல் இருக்க, அமெரிக்க ராணுவ தலைமையகமான பெண்டகன் முயற்சி எடுத்துவருவதாகவும் கவுண்டர்கரண்ட்ஸ் இணையதளம் கூறுகிறது.
Patrikai.com official YouTube Channel