பனியில் மூழ்கிய(!) கார்கள்
பனியில் மூழ்கிய(!) கார்கள்

நியூயார்க்:
மெரிக்காவில் குளிர்காலம் தொடங்கியுள்ள நிலையில் மிக அதிகமான பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. தலைநகர் வாஷிங்டனில் கடும் பனிப்புயல் வீசுகிறது. மூன்று அடி உயரத்திற்கு சாலைகளில் பனி கொட்டிக்கிடக்கிறது.
இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. வீடுகளிலேயே மக்கள் முடங்கிக்கிடக்கின்றனர்.   சாலைகளில் மட்டுமின்றி,  வீட்டு கூரைகள் மற்றும் மாடிகளிலும் பனி கொட்டிக் கிடக்கின்றது.
கடும் பனிப்புயல் வீசுவதால் தலைநகர் வாஷிங்டன் உட்பட பல  நகரங்களுக்கான விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. சுமார் 4,000 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
விமானத்தையே மூடிய பனி
விமானத்தையே மூடிய பனி

 
வாஷிங்டனில் மெட்ரோ ரயில் மற்றும் பஸ் போக்குவரத்துகள் தடைபட்டுள்ளன.  அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன.
அடிக்கடி மின்சாரம் துண்டிக்கப்படுகிறது. எனவே அங்கு உணவு மற்றும் குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை பொது மக்கள் சேமித்து வைத்து பயன்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது.   ஆகவே, பால், முட்டை, ரொட்டிகள் உள்ளிட்ட உணவுப் பொருட்கள் வாங்குவதற்கு மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கிறார்கள்.
குறிப்பாக வாஷிங்டன்,  டென்னிசே, மசாசூசெட்ஸ் பகுதிகள்  கடும் பனிப்புயலால் பாதிக்கப்பட்டுள்ளன.  இந்த பகுதியில் வசிக்கும் சுமார் ஆறு கோடி மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.