gun culture

வாஷிங்டன்:
அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரத்தை குறைப்பது தொடர்பாக  அதிபர் ஒபாமா நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.
அப்போது, 3 ஆண்டுகளுக்கு முன்  பள்ளி குழந்தைகள் 20 பேர் சுட்டுக் கொலை செய்யப்பட்டதை அவர் நினைவு கூர்ந்து கலங்கினார். மேலும் அவர் பேசுகையில்,‘‘ துப்பாக்கி கலாசாரத்தை குறைக்க அவசரமாக செயல்பட வேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டுள்ளது.  சிறப்பு அதிகாரம் மூலம், நாடாளுமன்ற அனுமதி இல்லாமல் அமெரிக்காவில் மக்கள் துப்பாக்கி வைத்திருப்பதற்குக் கடுமையான கட்டுப்பாடு கொண்டு வரப்படும். ஆன்லைன், கடைகள், கண்காட்சி மமூலம் அனைவருக்கும் துப்பாக்கி விற்பனை செய்யப்படுகிறது. வாங்குபவரின் பின் பலம் அறியாமல் துப்பாக்கி விற்பனை செய்யப்படுகிறது. ஆயுதம் விற்கும் தனியார் வியாபாரிகள் உரிமம் பெற்று, வாங்குபவரின் நடவடிக்கையை அறிந்து விற்பனை செய்ய வேண்டும். ஆயுதங்களை தாயாரித்து விற்கும் தொழிலதிபர்கள் அரசியல்வாதிகளை வேண்டுமானால் கைக்குள் வைத்திருக்கலாம். ஆனால் அவர்களால் அமெரிக்காவை கட்டுப்படுத்த முடியாது. பல உயிர்களைக் காக்கவும், பாதுகாப்பான கைகளுக்கு மட்டுமே துப்பாகிகள் கிடைப்பதை உறுதி செய்யவும் துப்பாக்கி கையாள்வதற்கான புதிய கட்டுப்பாடுகள் உதவும்’’என்றார்.
அமெரிக்காவில், கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் துப்பாக்கி வன்முறைச் சம்பவங்களில் சுமார் ஒரு லட்சம் பேர் வரை உயிரிழந்துள்ளனர் என்பது வருத்தமான செய்தியாகும்.