போபால்: குறைவான மழைப்பொழிவு ஒரு பக்கம் இம்சிக்கிறது என்றால், அபினி சுவையில் சொக்கிய கிளிகளும் சேர்ந்து, மத்தியப் பிரதேச விவசாயிகளை படாய்படுத்தி வருகிறது.
இதுகுறித்து அம்மாநில அபினி விவசாயிகளின் தரப்பில் கூறப்படுவதாவது, “மழைப்பொழிவுதான் அடிக்கடி எங்களின் வாழ்வுக்கு விரோதமாய் அமைகிறது என்றுபார்த்தால், இந்தப் பழாய்போன கிளிகளாலும் நாங்கள் மிக அதிக நஷ்டத்தை சந்தித்து வருகிறோம். இந்த தொல்லையைப் போக்க, சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் முறையிட்டும், ஒலிப்பெருக்கி பயன்படுத்தியும் எந்தப் பயனும் இல்லை. அதிகாரிகள் எங்களின் துயரத்தைப் பற்றி பெரிதாக எந்தக் கவலையும் கொள்வதில்லை.
ஒரு அபினி பூவில் 20 முதல் 25 கிராம் அளவுள்ள அபினி கிடைக்கிறது. ஆனால், இந்தக் கொடுமைக்கார கிளிகளோ, ஒரு நாளைக்கு 30 முதல் 40 தடவைகள் எங்களின் பயிர்களை வேட்டையாடுகின்றன.
எங்களின் இழப்பிற்கு யார் பதில் சொல்வார்கள்? இந்தக் கிளிகளை விரட்டுவதற்காக, நாங்கள் இரவு – பகல் பாராமல் எங்களின் நிலத்தில் காவல் காக்க வேண்டியுள்ளது’ என்று பரிதாபமாய் புலம்புகின்றனர்.
– மதுரை மாயாண்டி