சென்னை:

பாராளுமன்ற தேர்தலையொட்டி, தமிழகத்தில் அதிமுக கூட்டணியில் தேமுதிக இணைவது உறுதியாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இரு கட்சிகளிடையே கூட்டணி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என தெரிகிறது.

நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள அரசியல் கட்சிகள் கூட்டணிகளை தேடி ஓடிக்கொண்டி ருக்கின்றன.  தமிழகத்தில் அதிமுக பாஜக தலைமையில் ஒரு கூட்டணியும், திமுக காங்கிரஸ் தலைமையில் மற்றொரு கூட்டணியும் வலுவாக அமைக்கப்பட்டு வருகிறது.

இந்த இரு கூட்டணிகளிலும் சேராமல் போக்குகாட்டி வந்த தேமுதிக தற்போது அதிமுக கூட்டணியில் ஐக்கியமாக முடிவு செய்துள்ளது. தேமுதிகவுக்கு5 நாடாளுமன்ற தொகுதி மற்றும் ஒரு ராஜ்யசபா எம்.பி.  சீட் அத்துடன் தேர்தல் செலவுக்காக ரூ.50 சி என்றும் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் உலா வருகின்றன.

நேற்று நடைபெற்ற தேமுதிக நிர்வாகிகள் கூட்டத்திலும், அதிமுகவுட்ன்  கூட்டணி உறுதி செய்யப்பட்டு இருப்பதாகவும், தொகுதிகள் ஒதுக்கீடு குறித்து தேமுதிகவுடன் அதிமுக பேசி வருவதாகவும் கூறப்பட்டது.

இந்த பேச்சுவார்த்தைகள் சுமூகமாக நடைபெற்று தற்போது முடிவை எட்டி இருப்பதாக கூறப்படுகிறது.

அதேன்படி தேமுதிகவுக்கு, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருப்பூர், மதுரை, நாமக்கல் உள்ளிட்ட 5 மக்களவை தொகுதிகள்  ஒதுக்கப்படலாம் என்றும், இதற்கான அதிகாரப்பூர்வமாக கூட்டணி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.