பிரிட்டன்:
பல்வேறு நாடுகளில் இருந்து அகதிகளாக வந்த 10 ஆயிரம் சிறுவர்களை காணவில்லை என ஐரோப்பா போலீஸ் அறிவித்துள்ளது.
பல நாடுகளில் இருந்து ஆண்டுதோறும் ஐரோப்பா நாடுகளில் பலர் அகதிகளாக தஞ்சம் அடைந்து வருகின்றனர். இவ்வாறு வருபவர்களது பெயர்களை ஐரோப்பா போலீசார் பதிவு செய்து வருகின்றனர். அகதிகள் தொடர்பாக ஐ.நா. பார்வையாளர் ர் ஒருவர் ஐரோப்போல் தலைவரிடம் ஆலோசனை மேற்கொண்டார். அப்போது அவர் கூறிய தகவல்கள் அதிர்ச்சிகரமாக இருந்ததாக ஆலோசகர் பிரிட்ட டொனால்டு கூறியுள்ளார். போலீசார் கூறியது குறித்து விளக்கியிருப்பதாவது:
அகதிகளாக வந்த 10 ஆயிரம் சிறுவர் சிறுமியரை காணவில்லை. பெயர் பதிவுக்கு பிறகு இவர்கள் மாயமாகியிருப்பது தெரியவந்துள்ளது. கடத்தல் கும்பல், அல்லது விபச்சார கும்பலிடம் இந்த சிறுவர்கள் சிக்கவிட்டனரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இத்தாலியில் மட்டும் 5 ஆயிரம் சிறுவர்களை காணவில்லை. ஸ்வீடனில் ஆயிரம் குழந்தைகளில் கதி என்வென்றே தெரியவில்லை. லண்டனில் மாயமான சிறுவர்களின் எண்ணிக்கை இந்த ஆண்டு இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது.
சமூக விரோதிகள் குழந்தை அகதிகளை குறி வைத்து கடத்தியிருக்கலாம் என்ற சந்தேகம் இருக்கிறது. 900 சிறப்பு பிரிவுகளை கொண்ட வலுவான படையாக ஐரோப்போல் உள்ளது. கடந்த ஆண்டு மில்லியன் மக்கள் அகதிகளாக வந்து குடியேறியுள்ளனர். இதில் 27 சதவீதம் பேர் மைனர்.
சுமார் 26 ஆயிரம் சிறுவர்கள் ஆதரவின்றி தனியாக வந்துள்ளனர். 10 ஆயிரம் பேரை காணவில்லை என்பதே ஒரு அபிமானமாக தான் கூறப்படுகிறது. ஆனால் இதன் எண்ணிக்கை அதிகமாக இருக்கலாம்.