வைரலாகும் அடா சர்மா யோகா வீடியோ….!

Must read

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்து வரும் பிரபல நடிகை அடா சர்மா கயிரை கட்டி அதில் தொங்கியபடி பல விதமான யோகா பயிற்சிகளை செய்யும் வீடியோவை சமூகவலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.

படு கவர்ச்சியாக நடிக்கும் இவர் கடைசியாக பிரபுதேவா உடன் ‘சார்லி சாப்ளின்2’ படத்தில் நடித்துள்ளார். தற்போது ஹிந்தியில் ‘கமாண்டோ 3’ மற்றும் தெலுங்கில் ஒரு படத்திலும் நடித்து வருகிறார்.

பிட்நெஸ்ஸில் அதிகம் கவனம் செலுத்தும் அடா சர்மா, பெண்கள் தின வாழ்த்து சொல்லி ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் அவர் வீட்டு மொட்டை மாடியில் உள்ள மரத்தில் கயிரை கட்டி அதில் தொங்கியபடி பல விதமான யோகா பயிற்சிகளைசெய்கிறார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

More articles

Latest article