விஜய்யின் “புலி” கதை?

Must read

puli

 

விஜய் நடிக்கும் புலி படத்தின் கதை இதுதான் என்று பல கதைகள் உலாவந்துவிட்டன. லேட்டஸ்ட்டாக வாட்ஸ் அப்பில் உலாவரும் கதை இது.

அது ஒரு அழகான நகரம். அந்த நகரத்தை ஸ்ரீ தேவி ஆட்சி புரிகிறார். ஒரு நாள் தன் மகள் ஹன்சிகாவிற்கு வைரம் வாங்க வேண்டுமென்று தன்னுடைய படைத்தளபதி சுதீபிடம் ரூபாய் பத்தாயிரம் கொடுத்து நகரத்து பொற்கொல்லனான பிரபுவிடம் குறைந்த விலையில் வைரம் வாங்கி வருமாறு ஆணையிடுகிறார்.

சுதீப் , பிரபுவிடம் பணத்தை கொடுத்து செய்கூலி, சேதாரம் இல்லாமல் வைரம் வேண்டும் என்கிறார். ஆனால் பிரபுவோ தான் அவசரமாக குரோம்பேட் ‪கல்யாண் ஜுவெல்லர்ஸ் நகை கடையை திறந்து வைக்க செல்ல இருப்பதாகவும், பாண்டி பஜாரில் இருக்கும் கல்யாண் ஜுவெல்லர்ஸ் நகை கடையில் வைரம் வாங்கி வருமாறு தன் மகனான விஜய்க்கு கட்டளை யிடுகிறார்.

விஜயோ சிறுபிள்ளைத்தனமாக அந்த பணத்தை சுருதி ஹாசனுடன் டூயட் பாடியே செலவு செய்து விடுகிறார். குறித்த நேரத்தில் வைரம் வராததால் ஆத்திரம் அடைந்த சுதீப் விஜயை கட்டி இழுத்து அரசியின் கோட்டைக்கு கொண்டு வருகிறார். விஜய் பணத்தை செலவு செய்ததை அறிந்த ஸ்ரீ தேவி , அவரை கருஞ்சிறுத்தைக்கு உணவாக்கிவிட ஆணையிடுகிறார். ஆனால் விஜயின் அலறலைக் கண்ட சிறுத்தை இறந்து போகிறது. இதைக்கண்ட ஸ்ரீதேவி தன் மகளான ஹன்சிகாவை சிறுத்தையை அலறியே கொன்ற விஜய்க்கு திருமணம் செய்ய எண்ணுகிறார். ஆனால் அரியணையை கைப்பற்ற ஹன்சிகாவை மணமுடிக்க துடிக்கும் சுதீப், விஜய்க்கு மேலும் பல போட்டிகளை வைத்து பலப்பரீட்சை வைக்கிறார்.

இப்போட்டிகளில் எல்லாம் வென்று ஹன்சிகாவை விஜய் கை பிடிக்கிறாரா? பிரபு

குரோம்பேட்டையில் நகை கடையை திறக்கிறாரா?

சுருதிஹாசன் என்ன ஆனார் ? என்பதே மீதி கதை.

(பி.கு. : முழு கதையையும் வெளியிட்டால் , பாகுபலியின் பத்து மடங்கு வசூலான 5000 கோடி வசூல் பாதிக்கப்படும் என்பதாலும், தயாரிப்பாளரின் நலனையும் கருத்தில் கொண்டு என்னால் வெளியிட இயலவில்லை. மன்னிக்கவும்.)

இவன்
‪ #‎புலிக்குட்டியோட தம்பி ‘பூனக்குட்டி’ )

More articles

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article