வாட்ஸ்அப் பதிவு:
a
 
 
 
ந.கூ தலைவர்கள் கவனிக்க….!
சென்னை விமான நிலையத்துல நின்னுகிட்டே “சென்னைக்கு போனதுக்கு அப்புறம் சொல்றனு” சொன்னவர்..
டெல்லில பிரதமர பார்த்துட்டு வெளில வந்து பிரசிடண்ட பார்த்தேன்னு குளறியவர்.. .
மூனு மாசமா வெளிநாட்டுல இருந்தன் தமிழ்நாட்டுல என்ன நடந்துதுனே தெரியலனு சொன்ன.. பேப்பர் படிச்சாதான் தெரியும்னு சொன்ன அரசியல் “அறிவாளி”..
இறந்தபோனவருக்கு துக்க வீட்ல போய் ஆழ்ந்த நன்றிகள் என்று உளறியவர்..
காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கனும்னு ஜெயலலிதா வழக்கு தொடர்ந்துள்ளார்களேனு கேட்டதுக்கு.. ஜெயலலிதா ஆதரவு அளிக்கிறாங்கனா நான் எதிர்ப்பேன்னு சொன்ன அதி புத்திசாலி..
உலக முதலீட்டாளர்கள் மாநாட்ட பத்தி என்ன நினைக்கிறீங்கனு கேட்டப்ப.. நீங்க எதை பத்தி கேட்கறீங்கனே தெரியலனு சொன்ன விவரமான ஆளு.. –
– இப்படிப்பட்டவர்தான் விஜயகாந்த்.
ஆனா.. எதை வேணாம்லும் பொறுத்துப்பேன். “
பகத்சிங் சின்ன வயசுலேயே கல்யாணம் ஆகி செத்துப்போயிட்டார்”னு சொன்னாரு பாருங்க ஒருதடவை.. அதை மட்டும் என்னால மன்னிக்கவே முடியாதுங்க..!
படிப்பறிவு இல்லேன்னா தப்பே கிடையாது. அதே மாதிரி சில விசயம் தெரியாம இருக்கிறதும் குறை கிடையாது. ஆனா தான் என்ன பேசறோம்னே தெரியாம உளறுகிற இவரை முதல்வர் ஆக்கினா தமிழ்நாடு, இன்னும் சீரழியாதா?
அய்யா..  ந.கூ. தலைவர்களே.. ! முதலமைச்சர் ஆகுற வரைக்கும் விஜயகாந்துக்காக நீங்க பேசுவீங்க..! சரிதான், ஒருவேளை அவர் முதல்வர் ஆயிட்டா, அதுக்கப்புறம் கோட்டையிலேயும், கலெக்டர் மீட்டிங்கலேயும்கூட அவருக்கு பதிலா நீங்கதான் பேசுவீங்களா?
இல்லேன்னா.. பிரேமலதாவோ, சுதீஷோ பேசுவாங்களா? நாளைக்கு பிரதமர் காவிரி பிரச்சினைல இரு மாநில முதல்வரையும் கூப்பிட்டு பிரதமர் பேசுனா யாரு போவீங்க?
எதிர்க்கட்சி தலைவரா இருந்து என்னத்த கிழிச்சார் விஜயகாந்த்? மக்களுக்காக ஒரு போராட்டம்கூட..கிடையாது. கூடங்குளம், மீத்தேன், அதிமுக ஊழல், ஜல்லிகட்டு, சம்ஸ்கிருத எதிர்ப்பு, சகாயத்தை கிராணைட் ஊழல் அதிகாரிய நியமிக்க மறுத்த அதிமுவை எதிர்த்துனு.. மது ஒழிப்பு.. இப்படி எந்த முக்கிய விசயத்துக்கும் போராட்டம் நடத்தலை, இந்த எதிர்க்கட்சி தலைவர்.
அய்யா.. .ந.கூ. தலைவர்களே.. இப்பவாவத சிந்திச்சு பாருங்க.. இப்படிப்பட்ட விஜயகாந்தையா முதல்வராக்க துடிக்கிறீங்க?”