astrology_symbol-satyam1
வார ராசி பலன்: கணிப்பவர்: “100 பர்சென்ட் கரெக்ட்” ஜோதிட வல்லுனர் திலக்
20.01.2016 முதல் 26.01.2016வரை [தை 6ம்தேதி புதன்கிழமை முதல் 12ம்தேதி செவ்வாய்கிழமை வரை]

தங்கள் பலன் அறிய உங்கள் ராசியின் பெயர் மீது கிளிக் செய்க !

மேஷ ராசி நேயர்களே…!
இந்த வாரம் உங்கள் ராசிக்கு ஐந்தில் ராகு,ஆறில் குரு வக்கிரம் பெற்றிருக்கிறார்கள். ஏழில் செவ்வாய் ,எட்டில் சனிபகவானும், ஒன்பதில் புதன்சுக்கிரனும்,பத்தில் சூர்யனும் பதினொன்றில் கேதுவும் வீற்றிருக்கிறார்கள். சந்திரபகவான் உங்கள் ராசிக்கி தனஸ்தானத்தில் இருக்கும்போது இந்த வாரம் தொடங்குகிறது.
ஐந்தில் இருக்கும் ராகு அஷ்டமசனியும் ஆதிபத்தியத்தை குறைத்து குல தெய்வ ஆசியையும் சேர்ந்து கொடுப்பதாலும் விரயாதிபதி ஆறில் வக்கிரம் பெறுவதால் மிகுந்த நண்மைகளை அளிக்கும் வாரம் இது.
பல நாட்களாக தடங்கள் ஏற்படுத்திய காரியங்கள் இன்று முதல் ஒவ்வென்றாய் நடக்கும்.! சொத்துக்களை விற்கமுடியாமல் இருந்த நீங்கள் இந்தவாரம் நல்ல விலைக்கு விற்பீர்கள். அதில் வரும் பணத்தை தொழில் முடக்க வேண்டாம். அந்த பணத்தை ஏதாவது ஒருவகையில் பத்திரப்படுத்தி வைத்து கொள்ளுங்கள்.
நீண்டநாட்களாக நிறைவேற்றாமல் இருந்த நேர்த்திக்கடனை இந்த வாரத்தில் நிறைவேற்றுவீர்கள்… ராசிக்கு புதன்,சுக்கிரன் இனைவதால் படிப்பிலும், விளையாட்டிலும் சிறந்து விளங்குவீர்கள்!
இந்த வாரம் உங்களுக்கு ராசியான நிறம், இளம்சிவப்பு மற்றும்வெள்ளை .!
ரிஷப ராசி நேயர்களே…!
இந்த வாரம் உங்கள் ராசியிலயே சந்திரன் வீற்றிருக்க ஐந்தில் குரு வக்கிரத்தோடு துவங்குகிறது. புதன்,வியாழன் கிழமைகளில் புது முயற்சிகளில் ஈடுபட வேண்டாம். அதே நேரம்,வெள்ளிகிழமை அன்று நீங்கள் தொட்டதெல்லாம் துலங்கும்.
குரு பகவான் ஐந்தில் வக்கிரம் பெறுவதால் தாய்மாமன் மூலமாகவும், ,குழந்தைகள் வழியிலும் சிறு சிறு பிரச்சனைகள் ஏற்படக்கூடும். குறிப்பாக குழந்தைகளுக்கு மருத்துவ செலவுகள் ஏற்படலாம்.
ஆறில் இருக்கும் செவ்வாய், உங்கள் எதிரிகளை வீழ்த்தி, வெற்றிகளைத் தேடித்தரும். உங்களுக்கு கெடுதல் நினைப்பவர்கள்அவர்களாகவே சிக்கலில் மாட்டிக் கொள்வார்கள்.
குழந்தைகள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள்.. நான்கில் ராகுவும்,பத்தில் கேதுவும் இருப்பது திக் பலத்தை கொடுக்கும்.
இந்த வாரம் புதன்,வியாழன் தவிர மற்ற நாட்கள் நன்றாக இருக்கும் வார தொடக்கத்தில் சந்திரனை வழிபடவும் நெல்தானம் செய்யவும்
உங்களுக்கு ராசியான நிறம் பச்சை,கருப்பு.!
மிதுன ராசி நேயர்களே..!
இந்த வாரம் உங்கள் ராசிக்கு தனாதிபதி விரயஸ்தானத்தில் இருக்கும்போது தொடங்குகிறது. இது சுபச் செலவுகளை ஏற்படுத்தும். ஆகவே பணம் செலவானாலும் மனதில் மகிழ்ச்சி பொங்கும். குறிப்பாக திருமணம்,கிரகப்பிரவேசம் போன்ற நிகழ்வுகள் நடக்கக்கூடும்.
மூன்றில் இருக்கும் ராகு தெய்வ பலத்தை அளிக்கும். இளைய சகோதர சகோதரிகள் மற்றும் உங்களைவிட வயதில் சிறியவர்களிடம் அனுசரித்து செல்வது நல்லது.
எட்டாமிடத்தில் சூரியன் இருப்பதால் உஷ்ணசம்பந்தமான உடல் உபாதைகள் ஏற்படும். உணவு விசயத்தில் கட்டுப்பாடு அவசிம். ஆனால் பெரிய அளவில் உடல் நல பாதிப்பு ஏற்படாது. ஆறில் இருக்கும் சனி, உங்கள் எதிரிகளையும் உங்கள் மீது நட்பு கொள்ளச் செய்வார்.
குழந்தைகளுக்கு சிறு காயங்கள் ஏற்படக்கூடும். வாகனத்தல் செல்லும்போது கூடுதல் கவனம் தேவை.
ஒன்பதாம் இடத்தில் கும்பத்தில் கேது இருப்பது விஷ்டி யோகம் ஆகும். இதனால் தந்தைவழி பெண்களால் சொத்துக்களோ, பொருட்களோ வரும்.
இந்த வாரம் உங்களுக்கு ராசியான நிறம் வெள்ளை,நீலம்.!!
கடக ராசி நேயர்களே…!
உங்கள் ராசி ஆதிபதி பதினொன்றிலும், ஆறில் புதன் ,சுக்கிரன் சேர்க்கையுடன் இந்த வாரம் தொடங்குவதால் இந்த வாரம் முழவதும் சிறப்பாக அமையும். தொழில் அபிவிருத்தியடையும் உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நல்ல செய்தி வரும். அதே போல வேலைக்காக எதிர்பார்த்து காத்திருப்பவர்களுக்கும் நல்ல தகவல் வந்து சேரும்.
தடங்கல் ஏற்பட்ட திருமணங்கள் கைகூடிவரும். சிலர் புதிய வாகனம் வாங்ககூடும்.
மூன்றில் வக்கிரமாக இருக்கும் குரு பகவானால் கோபம் அதிகரிக்கும். மனதை சாந்தப்படுத்தி பொறுமையை கடைபிடியுங்கள். மொத்தத்தில் கடகராசியினருக்கு இந்த வாரம் ஏற்றம் மிகு வாரமே.
உங்களுக்கு ராசியான நிறம் இளம் சிவப்பு மற்றும் மஞ்சள்
சிம்ம ராசி நேயர்களே….!
உங்கள் ராசியாதிபதி ஆறிலும், ஜென்மத்தில் ராகுவும் இருப்பது சிறப்பானது அல்ல. சொந்த தொழில் புரிவோர் கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும். கடன் வாங்கி, முதலீடடு செய்ய வேண்டாம். கடன் தொல்லை அதிகரிக்கும். வாய்பபுள்ள சொத்தை விற்றேனும் கடனை அடைப்பது நல்லது. இல்லாவிட்டால் வழக்கு விவகாரங்களில் சிக்கக்கூடும்.
தனஸ்தானத்தில் வக்கிரம் பெற்றிருக்கும் வியாழபகவான்… மற்ற கிரகங்களும் சாதகமாகஇல்லை. ஆகவே பொறுயைாக சிந்தித்து செயல்படுங்கள். குழந்தைகள் நலனில் கூடுதல் அக்கறை செலுத்துங்கள். குல தெய்வ வழிபாடு சிறப்ப தரும் பாதிப்புகள்குறையும்…. துர்க்கை அம்மனை வழிபடவும், சனிகிழமை காலை ராகுகாலத்தில் பைரவர் வழிபாடு நல்லது.
இந்தவாரம் நன்மையான நிறம் நீலம்.
கன்னிராசி நேயர்களே…!
உங்கள் ராசிநாதன் நான்கில் கேந்திரம் பெற்றும்,லாபாதிபதி ஒன்பதில் கோணம் பெற்று இருக்கிறார்கள். ஆகவே இது உங்களுக்கு அற்புதமான வாரமாக அமையும். வெற்றிகள் தேடிவரும். எதிர்பாராத இடத்தில் இருந்து பெரிய உதவி கிடைக்கும்.
ஜென்ம வியாழன் வக்கிரம் ஒன்றும் பாதிக்காது. ,வாதகாதிபதி வக்கிரம் பெறுவது நன்மையான பலன்களையே தரும். சிலருக்கு சொத்துக்கள் வாங்கும் யோகம் அமையும். வேறு சிலர் புதிய வாகனம் வாங்குவீர்கள் .
நான்கில் இருக்கும் புதன்,சுக்கிரன் தாயின் ஆசிர்வாதத்தை அளிக்கும். தாயாருக்கு ஆபரணம் வாங்கி கொடுப்பீர்கள்.
விரயாதிபதியாகிய சூரின் ஐந்தில் கோணம் பெறுவதால் ஆன்மீக வழியில் செலவுகள் ஏற்படும். சிலர் புனித யாத்திரை மேற்கொள்வீர்கள். . ஆக கன்னிராசி நேயர்களுக்கு இந்த வாரம் பொன்னான நேரம்.!
இந்த வாரம் உங்களுக்கு ராசியான நிறம் வெள்ளை மற்று நீலம்.
துலாம் ராசி நேயர்களே..!
உங்கள் ராசி நாதன் சுக்கிரன் மூன்றிலும், சந்திரன் எட்டிலும் இருக்கும் போது இந்த வாரம் தொடங்குகிறது. இது உங்களுக்கு அவ்வளவாக உகந்த வாரம் அல்ல. புது முயற்சிகளை புதன் வியாழக்கிழமைகளில் துவங்க வேண்டாம். முடிந்தால் அடுத்த வாரம் தொடங்குங்கள். அவசர பணி என்றால், சுக்கிர பகவானுக்கு அர்ச்சனை செய்து விட்டு வெள்ளிகிழமை ஆரம்பிப்பது நல்லது.
ஆறாம் இடத்து அதிபதி பன்னிரண்டில் வக்கிரம் பெறுகிறார். இதனால் வீண் செலவுகள் வந்து சேரும். சில சிக்கல்களில் நீங்களாகவே வலியச் சென்று சிக்கிக்கொள்வீர்கள். கவனம் தேவை.
ராகு,கேதுக்கள் சாதகமான நிலையில் உள்ளன எனவே சிக்கல்களில் மாட்டினாலும், அதை எதிர்கொள்ளும் மனோ திடம் ஏற்படும்
ஜென்மத்தில் செவ்வாய் இருப்பது ஏழாமிடத்தை பார்ப்பதாலும் மனைவிக்கு சில மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும்.
சக்கரத்தாழ்வாரையும், ஆஞ்சநேயரையும் இந்த வாரம் வழிபாடு செய்தால்மிக நன்மயளிக்கும் … இந்த வாரம் உங்களுக்கு யோகமான நிறம் நீலம்.!!
விருட்சக ராசி நேயர்களே..!
உங்கள் ராசி நாதன் செவ்வாய் பண்னிரெண்டிலும் லாபாதிபதி தனஸ்தானத்திலும் இருந்து இந்த வாரம் தொடங்குவது நன்மையான பலன்களை அளிக்கும்!
வியாழன், வெள்ளிகிழமைகளில் மட்டும் புதிய முயற்சிகளை தவிர்ப்பது நல்லது. ஏழரை சனியின் ஆதிக்கம் இருந்தாலம் பாதிப்பு ஏதும் இருக்காது. அதே நேரம், . அதிக முதலீடு செய்து தொழில் செய்பவர்கள் மேலும் முதலீடு செய்ய வேண்டாம். கூட்டு தொழிலை தவிர்ப்பது நல்லது. உடல்ரீதியாக சில பிரச்சனைகள்வந்து கொண்டே இருக்கும். அதற்கு சனிபகவானுக்கு பீரித்தியும் குரு பகவானுக்கு அர்ச்சனயும் செய்யவும். எள் தாணியத்தை தானம் செய்வது நல்லது. கொண்டக்கடலையை தானம் செய்வது நல்லது ஆதரவற்றவர்கள் இருக்கும் ஆசிரமங்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்யுங்கள் செய்ய முடயவில்லை என்றார் யாருடைய உதவியாவது பெற்று செய்யுங்கள் கிரகங்களின் ஆதிபத்தியங்கள் குறையும்.
இந்த வாரம் ராசியான நிறம் பச்சை,மஞ்சள்
தனுசு ராசி நேயர்களே…!
உங்கள் ராசிநாதன் வக்கிரம் பெற்றிருக்கிற நிலையில் உங்களுக்கு இந்த வாரம் தொடங்குகிறது.. பெரும்பாலான கிரகங்கள் உங்கள் ராசிக்கி சாதகமாக சுழல்கின்றன. எதையும் எதிர் கொண்டு வெற்றி பெறுவீர்கள். எல்லோரும் உங்களிடம் ஆலோசனை கேட்பார்கள்
எதையும் மனதில் போட்டு குழப்பிக்கொள்ளாதீர்கள். அந்த அந்த சட்டென்று நல்ல யோசனைகள் மனதில் தோன்றும். காரியங்கள் சித்தியாகும் கவலைவேண்டாம்.
தொழில் நன்றாக நடக்கும். தனாதிபதி சனி பகவான் விரயஸ்தானத்தில் இருப்பதால் செலவுகளும் அதிகமாகும்.
ஒன்பதாம் இடத்து சூரியன் தனஸ்தானத்தில் அமர்வது மிகச்சிறப்பு. உங்களது பேச்சால் தொழில் சிறக்கும். அதே நேரம், நீண்டநாள் பழகிய நண்பரிடம் சில கருத்து வேறுபாடுகள் வரலாம். விட்டுக் கொடுத்து பொறுமையாக செல்வது நல்லது.
குல தெய்வ வழிபாடு நன்மைகளை கொடுக்கும், ஞாயிற்றுகிழமை அகஸ்தியரை வழிபடுவது நன்மையளிக்கும். சனி,மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் கவனம் தேவை இந்த வாரம் உங்களுக்கு ராசியான நிறம் வெள்ளை,கிரே.
மகர ராசி நேயர்களே…!
உங்கள் ராசியாதிபதி லாபஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார், விரயாதிபதி வக்கிரம் பெறுகிறார். ராகு ,கேதுக்கள் சாதகமாக இல்லாவிட்டாலும் மற்ற கிரகங்கள் துணையாக இருப்பதால் உங்களுக்கென்று தனி பாதையில் கம்பீரமாக பயணம் செய்வீர்கள். ஜனன ஜாதகத்தில் ராகு,கேது திசை இல்லாவிட்டால் பாதிப்பு ஏற்படாது.
தொழில் நன்றாக நடக்கும். புதுய தொழில் ஒன்றை துவங்கும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். அது நல்லதே. ஆனால் கூட்டு தொழில் வேண்டாம்.
குறிப்பாக உறவினர்களை தொழிலில் சேர்க்க வேண்டாம்.
விநாயகர் வழிபாடு… அதுவும் குளக்கரையில் வீற்றிருக்கும் விநாயகர் வழிபாடு நலம் பயக்கும். ஞாயிறு ,திங்கள் கிழமைகளில் கூடுதல் கவனத்துடன் எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள்.
இந்த வாரம் ராசியான நிறம் பச்சை,ஆரஞ்சு கலர்,!!!!
கும்ப ராசி நேயர்களே..!
உங்கள் ராசிநாதன் பத்திலும் லாபஸ்தானத்தில் புதன்,சுக்கிரன் அமர்ந்து தனாதிபதி எட்டில் அமர்ந்து வக்கிரம் ஆகிறார். இந்த நிலைகள் சாதகமானதுதான்.
இந்த வாரம் தொழில் நன்றாக இருக்கும், அடிக்கடி வெளியூர் பிரயாணம் மேற்கொள்வீர்கள் அதுவும் தொழில் சம்பந்தமாகவே இருக்கும், குழந்தைகள் கல்வியில் நன்கு படிப்பார்கள்.
ராசியில் கேது இருப்பது ஆன்மீக ஈடுபாட்டை அதிகரிக்கும், ஏழில் ராகு இருப்பது நற்பலன்களை தரும். குடும்பத்தில் சிலருக்கு மருத்துவ செலவுகள் ஏற்படும்.
அருகில் உள்ள அம்மன் கோயிலுக்குச் சென்று வழிபடுங்கள். மாற்றுதிறனாளிகளுக்கு உங்களால் முடிந்தளவு உதவுங்கள் சனிபகவானின் ஆசி முழுவதுமாக கிடைக்கும்..
இந்த வாரம் ராசியான நிறம் கரு நீலம்.
மீனராசி நேயர்களே..!
உங்கள் ராசிநாதன் குரு ஏழில் வக்கிரம் பெற்றும் ஒன்பதில் சனிபகவான் கோணத்திலும் நிற்கிறார். ராகுவும், கேதுவும் சாதகமாக இருப்பதால் மற்ற கிரகங்களின் பாதிப்புகளை எளிதாக சமாளித்து வெற்றி பெறுவீர்கள்.
கலை சார்ந்த துறையில் பணிபுரிபவர்களுக்கு இது பொன்னான வாரம். புதிய வாய்ப்புகளும்,புகழும் தேடிவரும்.
சுய தொழில் புரிபவர்களுக்கு ராகு பகவான் எதிபாராத லாபத்தை அளிப்பார்.
புதிதாக தொழில் துவங்க விரும்புவோரில் ஜாதகத்தில் திசா புத்திகள் சாதகமாக இருக்கும் நிலையில் புதிய தொழில் தொடங்கலாம். வெற்றி கிடைக்கும்.
ஆறாமிடத்து அதிபதியான சூரியன் உங்கள் ராசிக்கு லாபஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் நிச்சய வெற்றி உண்டு.
செவ்வாய் கிழமைகளில் மட்டும் கவனம் தேவை.
இந்த வாரம் ராசியான நிறம் வெள்ளை, இளம் சிவப்பு

Goto Top