Jin Teng,
வடகொரியா கப்பலை சிறை பிடித்தது பிலிப்பைன்ஸ்
ஐ.நா., பொருளாதார தடையை தொடர்ந்து வட கொரியா கப்பலை பிலிப்பைன்ஸ் சிறை பிடித்த வைத்துள்ளது.
பிலிப்பைன்ஸ் அதிபரின் செய்தித் தொடர்பாளர் மனோலோ குவெஸான் கூறியிருப்பதாவது:
‘‘வட கொரியாவின் அணு ஆயுதத் திட்டங்கள் உலக நாடுகளைக் கவலையடையச் செய்துள்ளன. இதன் எதிரொலியாக, ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சில் அந்த நாட்டுக்கு எதிராகப் பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது.
ஐ.நா. அமைப்பின் உறுப்பினர் என்ற முறையில் அந்தத் தடைகளை செயல்படுத்துவது பிலிப்பைன்ஸ் நாட்டின் கடமையாகும். அதனால், வட கொரியாவின் ஜின் டெங் சரக்குக் கப்பலை சிறைப் பிடித்து வைத்துள்ளோம். அந்தக் கப்பலின் பணியாளர்கள் வட கொரியாவுக்கு திருப்பி அனுப்பப்படுவார்கள்’’ என்றார்.
‘‘பறிமுதல் செய்யப்பட்டக் கப்பலில், தடை செய்யப்பட்ட பொருள்கள் ஏற்றப்பட்டுள்ளனவா என்பது குறித்து ஐ.நா. குழு ஆய்வு மேற்கொள்ளும்’’ என்று வெளியுறவுத் துறை அமைச்சர் சார்லஸ் ஜோஸ் தெரிவித்தார்.
சுபிக் துறைமுகத்தில் கடந்த 3 நாள்களாக ஜின் டெங் கப்பல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அந்தக் கப்பலில் ஆயுதங்கள் மறைத்து வைக்கப்பட்டருக்கிறதா என்பது குறித்து நவீன கருவிகள் மூலம் பிலிப்பின்ஸ் அதிகாரிகள் ஆய்வு செய்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.