new

 

 

 

 

 

 

 

பேஸ்புக், ட்விட்டர தொறந்தா லெக்கிங்ஸ் மேட்டர்தான் டைட்டா ஓடிக்கிட்டு இருக்கு.  பெண்கள் லெக்கிங்ஸ்அணியலாமா கூடாதானு வாக்குவாதம் பண்ணிகிட்டே இருக்காங்க.

உடனே எனக்கு மகேஸ் அக்கா ஞாபகம்தான் வந்துச்சு. ஃபேஷன் டிசைனர். அவங்களுக்கு போன் போட்டேன்.

“என்ன ரவுண்ட்ஸ்.. நல்லா இருக்கியா.. கடையிலதான் இருக்கேன்.. வாயேன்”ன்னாங்க.

மகேஸ் அக்காகிட்ட, “லெக்கிங்கஸ் அணியறது பத்தி லேடீஸுக்கு டிப்ஸ் கொடுங்களேன்”னு கேட்டேன்.

“ஷ்யூர்..”னு சிரிச்ச அக்கா, “அதுக்கு முன்னால ஒரு தகவல் சொல்றேன்.. லெக்கிங்ஸ் அப்படிங்கிறது ஏதோ இன்னைக்கு வந்ததா நெனெச்சு சில பேர் காச் மூச்னு கத்துறாங்க. ஆனா அது உண்மையில்லை… மொகலாயர் காலத்துல டைட் பேண்ட் அறிமுகமாச்சு. அதை லேசா மாத்தி இப்போ லெக்கிங்ஸ் வந்திருக்கு”னு வரலாற்றுதகவலை அக்கா சொன்னப்ப அப்படியே நான் ஷாக் ஆயிட்டேன்.

7

அப்புறம் லெக்கிங்ஸ் டிப்ஸ் கொடுத்துச்சு மகேஸ் அக்கா:

“ கோல்டு, சில்வர், காப்பர் கல்கள்லேயும் கண்ணைப் பறிக்கிற ப்ளரெசன்ட் கலர்கள்லேயும் லெக்கிங்ஸ் வருது. மெட்டீரியல்னு பார்த்தா… வெல்வெட், லேஸ், டெனிம், லைக்கரா மாதிரி துணிவகைகள்ல கிடைக்குது.

பெரும்பாலான பெண்கள் லைக்கரா துணியில் தைக்கப்படுற லெக்கிங்ஸ்சையே விரும்பி அணியறாங்க. ஏன்னா, அதுதான் உடலோடு ஒட்டி இருக்கும்.

3

ஆனா இந்த உடை பெண்களோட பாடி ஸ்டெக்சர வெளிச்சம் போட்டு காட்டிடும். அதனால உடம்பை இறுக்கிப் பிடிக்கிற மாதிரி டாப்ஸ் அணியாமால் இடுப்பிற்கு கீழே இறங்கி இருக்கிற மாதிரி டாப்ஸ் அணியலாம்.   முட்டிவரைக்கும் நீண்டிருக்கிற குர்தா, லூசான டாப், சல்வார், மாதிரி மேலாடைகளை மேட்சாக செலக்ட் பண்ணி லெக்கிங்கிஸ் போடலாம்.

அவங்கவங்க உடல் அமைப்புக்கு ஏத்த மாதிரி, பலவகை லெக்கிங்ஸ் இருக்கு. அதை கரெக்டா செலக்ட் பம்ணி அணிஞ்சா பாக்க லுக்கா இருக்கும்.

கொஞ்சம் ஒல்லியா இருக்கிறவங்க லெக்கிங்ஸ் அணிஞ்சா நல்ல லுக் கிடைக்கும். அதே போல உசரமான லேடீஸ், முக்கால் நீளமுள்ள லெக்கிங்ஸ் அணியலாம்.   குண்டாக இருக்கற லேடீஸ், அவங்க இடுப்பளவிற்கு ஏத்த மாதிரி, லெக்கிங்ஸ் தேர்ந்தெடுக்கணும்.

உயரம் குறைவாக, குண்டாக, இருக்கிறவங்க முழு லெக்கிங்ஸ் போட்டு, முட்டி கால் வரை வர்ற லூசான டாப் அணிஞ்சா எடுப்பாக இருக்கும் ஏன்னா, நீளமான டாப் அணிஞ்சா, இன்னும் குள்ளமா காட்டும்.

இன்னொரு முக்கியமான விசயம், லெக்கிங்ஸ் அணியறப்போ, பாக்சர் உள்ளாடையை அணிவதே நல்லது”னு நீளமா விளக்கம் சொன்னுச்சி ஃபேஷன் டிசைனர் மகேஸ் அக்கா.

“தேங்கஸ்க்கா”னு பை சொல்லிட்டு கிளம்புனேன். வழியில பெசன்ட் நகர் சிக்னல்ல நிக்கறப்ப, “டேய்.. ரவுண்ட்ஸ்”னு ஒரு சத்தம். யாருன்னு பாத்தா, நம்ம நிம்மி! என் கேர்ள் ஃப்ரண்’ட்.

“எங்கடா போயிட்டு வர்றே”ன்னு கேட்டுகிட்டே பின் சீட்டுல ஏறி உக்காந்தா.

சிக்னல் விழவும், வண்டியை ஓட்டிகிட்டே, லெக்கின்ஸ் மேட்டருக்காக போயிட்டு வர்றதை சொன்னேன்.

“லெக்கிங்ஸ் அப்டின்னாலே பிரச்சினைதான் போலிருக்கு”னு சிரிச்சவ, “வண்டிய ஆனந்த பவன்ல நிறுத்து.. சாப்டுகிட்டே லெக்கிங்ஸ் மேட்டர் ரெண்டு சொல்றேன்”னா.

நிம்மி ஏதோ ஆர்டர் பண்ண.. நான் அவ சொல்லப்போற மேட்டர்லய கவனமா இருந்தேன். (ஜெர்னலிஸ்ட்!)

என் பக்கம் திரும்பிய நிம்மி, “கேரளா கோழிக்கோடுல நடக்காவு அப்படிங்கிற ஏரியால முஸ்லிம் அமைப்பு நடத்துற லேடீஸ் காலேஜ் இருக்கு. அங்க என் ப்ரண்ட் ஒருத்தி படிக்கிறா.

அங்க படிக்கிற பொண்ணுங்க மார்டனா டிரஸ்போட்டு வருவாங்க. ஆனா திடீர்னு, “இறுக்கமான ஜீன்ஸ் பேண்ட், லெக்கின்ஸ், குட்டை பாவாடை எல்லாம் போட்டு வரக்கூடாது. சல்வர் கமீஸ், சுடிதார் போட்டு, அதுக்கு மேல ஓவர் கோர்ட் அணஞ்சுதான் வரணும்”னு ஆர்டர் போட்டுட்டாங்க.

அதுமட்டுமில்ல.. “முஸ்லிம் பொண்ணுங்க பர்தா அணிஞ்சிதான் வரணும்” அப்படினும் உத்தரவாம்! என் ப்ரண்ட் புலம்பறா”னு சோகமா சொன்னா நிம்மி.

“அடப்பாவமே!”னு நானும் வருத்தப்பட்டேன். அதுக்கு நிம்மி, “கேரளா மட்டுமில்ல.. இங்க தமிழ்நாட்லயும் லெக்கிங்ஸூக்கு தடை இருக்கு தெரியுமா”னு கேட்டா.

“அட.. பெண்ணுரிமை போராளிங்க இருக்கிற இந்த தேசத்தில தடையா”னு ஆச்சரியமா கேட்டேன்.

“ஆமாண்டா.. தமிழ்நாட்டுல இருக்கிற அரசு மெடிக்கல் காலேஜுங்க, அரசு பல் மருத்துவக்கல்லூரி எல்லாத்திலும் இந்த உத்தரவு கண்டிப்பா அமல் படுத்தப்படுது.     இங்க சேரும்போதே, “ஸ்டூடண்ட்ஸ் யாரும் ஜீன்ஸ் பேண்ட், டி–சர்ட் மாதிரி உடைகளை அணியக்கூடாது. குறிப்பா மாணவிகள் ‘லெகின்ஸ்’ அணியக்கூடாது”னு உத்தரவு. இந்த உத்தரவை போட்டிருக்கிறது தமிழ்நாடு மருத்துவ கல்வி இயக்கம்!”னு நிம்மி சொன்னா.

சாப்பிட்டு கிளம்பி நிம்மிய அவ ஆபீஸ்ல விட்டுட்டு, வெளியே வந்தேன். அட, நம்ம இலக்கிய பித்தன்! என் பைக்கை நிறுத்துன இடத்துகிட்ட ஏதோ ஏதோ யோசனையா நின்னுகிட்டு இருந்தாரு.

நிறைய எழுதுறதா சொல்லியிருக்காரு. பட், நான் படிச்சதில்லை. ஆனா சுவாரஸ்யமா பேசுவாரு. “சார்.. நல்லாருக்கீங்களா”னு அவரு முன்னால போய் நின்னேன்.

“ஹாய்.. ரவுண்ட்ஸ்.. என்ன இங்கே”ன்னாரு. கொஞ்ச நேரம் பேசிக்கிட்டிருந்தோம்.

“கவிஞர் ஜெயமோகன் ஒரு கட்டுரையில, என்ன சொல்லியிரு்க்காரு தெரியுமா? அவரு மணிப்பூர் டூர் போயிருந்தப்போ அங்க பெண்கள் பலபேர் லெக்கிங்ஸ்தான் அணிஞ்சிருந்ததை பார்த்தாராம். பழைய பாரம்பரத்தை தீவிரமா கடைபிடிக்கிற மணிப்பூர்லயே லெக்கிங்ஸ் புழங்குது”னு இலக்கியப்பித்தன் சொன்னாரு.

89056daf-76a3-4c89-8577-09bb781fdee8OtherImageசட்டை பையில இருந்த மினி டைரிய எடுத்து இதையும் குறிச்சிக்கிட்டேன். திடும்னு சந்தேகம் வந்துச்சு.. “அது சரி சார், ஜெயமோகன் எழுத்தாளரா, கவிஞரா”னு கேட்டேன்.

கொஞ்சம் யோசிச்சவர், “கோழி குருடா இருந்தாலும் குழம்பு ருசியா இருக்கணும்னு உனக்கு தெரியாதா… அவரு யாரா இருந்தா என்ன..? பெரிய ஆளு! லெக்கிங்ஸ் பத்தி அவரு எழுதி இருக்கிறத சொன்னேன்.. அது பத்தாதா? முதல்ல கிளம்பு”னு விரட்டினாரு.

மனுசன் இவ்ளோ கோவக்கரரா இருப்பாருன்னு தெரியாம போச்சேனு நெனச்சுகிட்டே வண்டிய கிளப்புனேன்.

மனசுக்குள்ள லெக்கிங்கஸாவே வந்துச்சு. ஆகா….. மேட்டர்…!

போன வருசம் அமெரக்காவுல ஒரு நிறுவனம், தான் தயாரிச்ச லெக்கிங்ஸ்ல இந்து கடவுள் பங்களை போட்டு விற்பனைக்கு வச்சு.. பிரச்சினை ஆச்சே..! அதையும் கட்டுரையில சேத்துக்கணும்…

kadavul“அடேய்… கண்ணை எங்கடா வச்சுக்கிட்டு வர்றே”னு திடும்னு ஒரு சத்தம். பக்கதுல என்னை கிராஸ் செஞ்சுட்டு போற கார்லேருந்துதான் வந்தது.

சரி,. பைக் ஓட்டும்போது கவனத்தை சிதறவிடக்கூடாது. (சைடுல இப்படி ஒரு மெஸேஜூம் சொல்லிட்டேன் பாருங்க!)

ஆனா, புத்தி சொல்றத மனசு கேக்குறது இல்லியே.. தேனாம்பேட்டைகிட்ட வந்தப்ப, ஸ்கின் டாக்டர் அமிர்தம் வீடு இங்கதானே இருக்குன்னு, பைக்கை அவர் வீட்டுக்கு விட்டேன்.

நல்லவேளை வீட்டுலே இருந்தார். போன வேகத்துக்கு, “டாக்டர்.. லெக்கிங்ஸ் அணியறாதால தோல் சம்பந்தபப்ட்ட நோய் ஏதும் வருமா”னு கேட்டேன். ஏனோ திடீர்னு அப்படி ஒரு கேள்வி வந்து வுழுந்திடுச்சு.

“நிச்சயமா வரும்”னு ஆரம்பிச் டாக்டர், ““லெக்கிங்கஸ் உடம்போட ஒட்டி இருக்கிறத ஆடை. நடந்து போறதானாலும் சரி, வண்டி ஓட்டறதானாலும் சரி.. லெக்கிங்ஸ் வசதியான உடைங்கிறதால பல இளம்பெண்ள் இப்போ விரும்பி அணியறாங்க..

நம்ம வசதிக்கேத்த மாதிரி இறுக்கமான உடை அணியறத தப்பு சொல்ல முடியாது. ஆனா எப்பவுமே இப்படி இறுக்கமான உடை அணியறது உம்புக்கு நல்லது இல்லே.

இறுக்கமா உடை அணியும்போது, வியர்வை வெளியேறாது. அதனால கிருமிங்களோட வளர்ச்சி பலமடங்கு உயர்ந்துடும். ஸோ… வேர்க்குரு, உஷ்ணக் கட்டி மாதிரி தோல் நோய்கள் சருமத்த பாதிக்கும்.

லெக்கிங்ஸ்னு இல்லே… உள்ளாடை, சாக்ஸ் உட்பட எந்த உடையுமே அதீத இறுக்கமா போடக்கூடாது. அதனால உடம்புல துர்நாற்றம் வீசும். , படை, சொறி சிரங்கு, அரிப்பு வரும். அது மட்டுமில்ல… உடம்புல ரத்த ஓட்டம் குறைஞ்சு போய், சுவாசத் திறன் பாதிக்கும். தோள் பட்டை, முதுகு வலிகூட வரலாம்.

6

வெப்பமண்டல நாட்டுல வாழற நம்மள மாதிரி ஆளுங்க.. ஆணோ பெண்ணோ… கொஞ்சம் தளர்வான பருத்தி ஆடை அணியறதுதான் உடல் ஆரோக்கியத்துக்கு நல்லது. பருத்தி ஆடை, ஈரத்தை உள்வாங்கறதோட உடலுக்கு நல்ல குளிர்ச்சியையும் தரக்கூடியது.”னு தெளிவா சொன்னாரு ஸ்கின் டாக்டர் அமிர்தம்.

அதோட, “இறுக்கமான ஆடைங்களால நரம்பு சம்பந்தமான வியாதிங்க வரவும் வாய்ப்பு இருக்கு. என் ப்ரண்ட் டாக்டர் செல்வத்துகிட்ட கேளு”னு போன் நம்பரும் கொடுத்தாரு.

டாக்டருக்கு டபுள் நன்றி சொல்லிட்டு, ஆபீஸ் வந்தேன். வந்த உடனே நரம்பியல் டாக்டர் செல்வத்துக்கு போன் போட்டேன்..

“லெக்கிங்ஸ் மாதிரி இறுக்கமான ஆடைகளை தொடர்ந்து அணிஞ்சா தொடை, கால் மரத்துப்போய் வலி வரும். நரம்புகள்ல ஒருவித அழுத்தம் ஏற்படும்.   வயிற்றுப் பகுதி இறுக்கப்பட்டு,  இரைப்பையின் செயல்திறனைப் பாதிக்கும். நெஞ்சு எரிச்சலும் அசிடிட்டியும் ஏற்பட்டு செரிமானத்தை பாதிக்கும்.8

இறுக்கமான சாக்ஸ் அணிஞ்சாலும் பிரச்சினைதான்.   காலில் உள்ள ரத்தக் குழாய்களை அழுத்திக் கால் வீக்கம் ஏற்படும்.  அது மட்டுமல்ல மேற்சட்டையை இறுக்கமா போடறதால கண்ணும் மூளையும் பாதிக்கப்படுற ஆபத்து இருக்கு.”னு திகிலா சொல்லி முடிச்சார் நரம்பியல் மருத்துவர் செல்வம்.

எல்லாத்தையும் எழுதி டைப் அடிச்சு, எடிட்டர் ஃபோல்டர்ல தூக்கிப்போட்டேன். படிச்சிட்டு. இன்ட்டர்காம்ல கூப்புட்டவரு, “லெக்கிங்ஸ் பத்தி இவ்வோ மேட்டர் எழுதியிருக்கே.. சினிமால முதன் முதலா லெக்கிங்ஸ் போட்டது யாரு தெரியுமா?”னு கேட்டாரு.

“தெரியலியே”ன்னேன்.

 

“கொஞ்சம் வெயிட் பண்ணு.. வாட்ஸ் அப்ல அனுப்பறேன்”னு சொன்னாரு.

ஆகா…  எந்த நடிகையா இருக்கும்… அதுவும் அந்தகாலத்திலேயே… முதன் முதலா – யோசிச்சிக்கிட்டு இருக்கும்போதே வாட்ஸ்அப்ல படம் வந்துச்சு.

கீழே இருக்கிற படம்தான் அது.

4

படத்துக்குக் கீழே, “விட்டாலாச்சாரியார் படத்துல வர்ற பேய்ங்கதான் தமிழ் படத்துல முதன் முதலா லெக்கின்ஸ் போட்டுதுங்க”னு குறிப்பு வேற…  ஹூம்!