அயோத்தி ராமர் கோயில்  பக்தர்களுக்கு அடிப்ப்டை வசதி: சுப்பிரமணியசாமி மனுவை ஏற்க உச்சநீதிமன்றம்  மறுப்பு

Subramanian Swamy
சுப்பிரமணியசாமி

சர்ச்சைக்குரிய அயோத்தி ராமஜென்மபூமியை பார்வையிட வரும் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க  உத்தரவிடக்கோரிய  சுப்பிரமணியசாமி மனுவினை ஏற்க உச்ச்சநீதிமன்றம் இன்று ( மார்ச்-5) மறுத்துவிட்டது.
ராமர் ஜென்மபூமியை பார்வையிட வரும் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்திடக்கோரும் சுப்பிரமணியன் சுவாமியின் மனு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்கூர் மற்றும் லலித் ஆகியோர்  அடங்கிய பெஞ்ச் முன் இன்று விசாரணைக்கு வந்தது.  அப்போது, “ இந்த வழக்கில் நீங்கள் நேரடிக் கட்சிக்காரர் இல்லை. இந்த வழக்கில் நீங்கள் இடையில் சேர்ந்து கொண்டவர் மட்டுமே. எனவே உங்கள்  மனுவை மற்ற கட்சிக்கார்ர்களுடன் சேர்த்துதான் நாங்கள் விசாரிக்க முடியும். இப்போது இதனை ஏற்றுக் கொள்ளமுடியாது ” என்று  நீதிபதிகள் மறுத்து விட்டனர். சர்ச்சைக்குரிய ராம ஜென்ம பூமியை பார்வையிட வரும் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகளான குடிதண்ணீர், கழிப்பிட வசதிகள் போன்றவை கிடைக்கப்பெறவில்லை என சுவாமி தனது  மனுவில் குறிப்பிட்டிருந்தார். அவசர விசாரணை தொடர்பாக தலைமை நீதிபதியை அணுகுமாறு உச்சநீதிமன்றம் முன்னதாக சுவாமியை கேட்டுக் கொண்டது.
swamy-at-supreme-court
ராமர்ஜென்மபூமியை பார்வையிட வரும் பார்வையாளர்களுக்குத் முடிந்தவரை  தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்குமாறு மத்திய அரசினையும், உ.பி.மாநில அரசையும் கடந்தாண்டு உச்சநீதிமன்றம் கேட்டுக் கொண்டது.  அங்குவரும் பகத்ர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிடக்கோரிய சுவாமியின் மனு செய்திருந்தார். அதனைத் தொடர்ந்து இதுதொடர்பாக பதில் அளிக்குமாறு மத்திய அரசினை உச்சநீதிமன்றம் வலியுறுத்தியது.  சுவாமி தாக்கல் செய்த தனது மனுவில், இந்த தலத்தை பார்வையிட வருபவர்கள், ராமபிரானின் பக்தர்கள். அவர்கள் குடிதண்ணீர், கழிப்பிட வசதிகள் போன்ற அடிப்படை வசதிகள்கூட இல்லாமல் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்குகின்றனர். எனவே இந்த வசதிகளை உ.பி.மாநில அரசும், மத்திய அரசும் செய்து கொடுக்கவேண்டும்.
1996 இல் உச்சநீதிமன்றம் வழங்கிய உத்தரவில் சர்ச்சைக்குரிய அந்த இடத்தில்  எவ்வித புதிய கட்டுமானப்பணிகளைத்தான் தொடங்க்ககூடாது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் சர்ச்சைக்குரிய அயோத்தியின் ராமஜென்மபூமியின் இடம் நோக்கி பல லட்சக்கணக்கான இந்து மத  பக்தர்கள் யாத்திரையாக வந்து செல்கின்றனர். அவர்கள் பூஜை நடத்தவும், வழிபாடுகள் செய்யவும் உச்சநீதிமன்றம் வழிவகை செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்றும் சுப்பிரமணிய சுவாமி தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.