ராஞ்சி டெஸ்ட்: சச்சின் சாதனையை சமன் செய்த இந்திய இளம் பவுலர்!

Must read

 

ராஞ்சி:டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதல் இரண்டு பந்துகளில், சிக்சர் அடித்து, மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் சாதனையை சமன் செய்திருக்கிறார் இளம் வீரர் உமேஷ் யாதவ்.

இந்தியா வந்துள்ள தென் ஆப்ரிக்கா தற்போது டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. ராஞ்சியில் 3வது டெஸ்ட் போட்டியில் இந்தியாவுடன் சந்தித்து வருகிறது.

முதலில் களம் இறங்கிய இந்தியா ஹிட்மேன் ரோகித்தின் இரட்டை சதம், ரகானேவின் சதம் ஆகியவற்றில் 9 விக்கெட் இழப்புக்கு 497 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்திருக்கிறது. இந்தியாவின் அதிக ரன்கள், ரசிகர்களுக்கு குஷியை ஏற்படுத்தி உள்ளது.

இதைடுயடுத்து, தமது முதல் இன்னிங்சை தொடங்கிய தென் ஆப்ரிக்கா, இந்திய பவுலிங்கை எதிர்கொள்ள முடியவில்லை. முக்கிய வீரர்கள் உள்பட யாரும் களத்தில் அதிக நேரம் நிற்கவில்லை. ஹம்சா, பவுமா, லிண்டே ஆகியோர் மட்டும் இரட்டை இலக்க ரன்களை எட்டினர்.

இந்த டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர் உமேஷ் யாதவ், யாரும் எதிர்பாராத வண்ணம், மாஸ்டர் பிளாஸ்டர் சச்சினின் சாதனையை சமன் செய்திருக்கிறார். அதாவது, 112 ஓவரில் ஜடேஜோ ஆட்டமிழக்க களத்துக்கு வந்தார் உமேஷ் யாதவ்.

அனைவராலும் பவுலராக அறியப்பட்ட அவர், தாம் சந்தித்த முதல் 2 பந்துகளை சிக்சர்களுக்கு விரட்டினார். இந்த சிக்சர்கள் மூலம் ஒரு புதிய சாதனையை அவர் எட்டியிருக்கிறார். அதாவது தாம் சந்தித்த முதல் 2 பந்துகளை சிக்சருக்கு அனுப்பிய சச்சின் சாதனையை சமன் செய்திருக்கிறார்.

இதற்கு முன்னதாக 2 பேர் இந்த சாதனையை படைத்திருக்கின்றனர். ஒருவர் நமது சச்சின். மற்றொருவர் வெஸ்ட் இண்டீசின் மறைந்த கிரிக்கெட் வீரர் வில்லியம்ஸ். இது தவிர மற்றொரு சாதனையையும் படைத்திருக்கிறார்.

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 30 ரன்களை அதிவேகமாக கடந்த வீரர் என்ற சாதனையை உமேஷ் யாதவ் படைத்திருக்கிறார். முன்னதாக இந்த சாதனையை, நியூசிலாந்தின் பிளமிங், வெஸ்ட் இண்டீசின் மெக்லேன், பாகிஸ்தானின் அப்துல் ரசாக், ஆஸ்திரேலியாவின் ஹோவல் ஆகியோர் இந்த சாதனையை படைத்திருந்தனர்.

இந்த 2 சாதனைகள் மட்டுமல்லாது, மற்றொரு சாதனையையும் படைத்து அசத்தி இருக்கிறார் உமேஷ் யாதவ். தாம் சந்தித்த 10 பந்துகளில் 310 ஸ்டிரைக் ரேட் எடுத்து சாதித்திருக்கிறார்.

More articles

Latest article