முதல் முதலாக இணையும்  சூர்யா, கார்த்தி!

Must read

download (1)
சூர்யா நடிக்க வந்து ஹிட் கொடுக்க ஆரம்பித்ததில் இருந்தே, “அப்பா சிவகுமாருடன்  இணைந்து நடித்தால் நன்றாக இருக்குமே” என்ற பேச்சு ஆரம்பித்துவிட்டது.  இப்போது சிவகுமார் திரையுலகில் இருந்தே ஒதுங்கிவிட்டார்.
சூர்யாவின் தம்பி, கார்த்தி நடித்த முதல் படமான “பரூத்திவீரன்” படமே சூப்பர்டூப்படர் ஹிட் ஆனது. அதிலிருந்து, “அணணன் சூர்யாவும், தம்பி கார்த்தியும் இணைந்து நடிப்பார்களா” என்ற எதிர்பார்ப்பு கிளம்பியது. அவ்வப்போது, “இருவரும் ஆந்த படத்தில் சேர்ந்து நடிக்கப்போகிறார்கள்.. இந்த படத்தில் சேர்ந்து நடிக்கப்போகிறார்கள்” என்று தகவல் வரும், பிறகு அது அப்படியே அமுங்கிப்போகும்.
பெரிய இயக்குநர்கள் சிலர் இந்த காம்பினேஷனுக்காக முயற்சித்தும் ஏனோ இதுவரை ஒருக் அவுட் ஆகவில்லை. இந்த நிலையில் மீண்டும் அப்படி ஒரு பேச்சு கிளம்பியிருக்கிறது.
ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்துவரும் S3 படத்தில் நடிகர் கார்த்தி ஒரு சிறிய  ஆனால் பவரான வேடத்தில் நடிக்கிறாராம்.  இதுகுறித்த முறையான அறிவிப்பு விரைவில் வெளியாகுமாம்.
அதோடு, “இதே படத்தில் சிவகுமாரையும் நடிக்க வைக்க ஹரி கேட்டார். அவரோ ஆளைவிடுப்பா என்று ஒதுங்கிவிட்டார். ஆனால் கார்த்தி நடிப்பது உறுதி” என்கிறார்கள்.

More articles

1 COMMENT

Latest article