ஆடுகளம் படத்தில் தனுஷ்
ஆடுகளம் படத்தில் தனுஷ்

சென்னை:
ல்லிக்கட்டுக்கு எதிராக நடிகர் தனுஷ் கருத்து தெரிவித்ததாக தகவல்கள் பரவின. அதோடு, ஜல்லிக்கட்டு நடத்த தடை வாங்கிய பீட்டா என்கிற அமைப்பின் விளம்பர தூதராக அவர் செயல்படுவதகவும் சொல்லப்பட்டது. இதையடுத்து தனுஷுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.
இதையடுத்து அவர் தன்னிலை விளக்கம் அளித்துள்ளார். “பீட்டா எனும் விலங்குகள் நல அமைப்பின் தூதராக நான்  செயல்படுவதாக வெளியான செய்திகளில் உண்மை இல்லை. நான் முழுமையாக சைவ  உணவுக்கு மாறிவிட்டேன். அதை பாராட்டி அந்த அமைப்பு எனக்கு விருது கொடுத்தது. அது மட்டுமே உண்மை.
மேலும், ஜல்லிக்கட்டு நடத்துவதை எதிர்த்து நான் பேசியதாக வந்த தகவலிலும் உண்மை இல்லை.  தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டை நான் ஆதரிப்பவன்.  எனக்கு எதிரான வதந்திகளை நம்ப வேண்டாம்” என்று கூறியிருக்கிறார் தனுஷ்.
இதே கருத்தை தனது பேஸ்புக் மற்றும் ட்விட்டர் பக்கங்களிலும் தெரிவித்துள்ளார்.