நோட்டாவுக்கு 35 சதவிகித ஓட்டு பதிவானால் கட்சிகளின் வெற்றி ரத்தா?

Must read

1
தேர்தலில் நோட்டாவுக்கு 35 சதவீத ஓட்டு பதிவானால் அந்த தொகுதியில் கட்சிகளின் வெற்றி ரத்து செய்யப்படும் என்று ஒரு தகவல் சமூகவலைதளங்களில் படு வேகமாக பரவி வருகிறது.
ஆனால் இது தவறான தகவல் என்று   தேர்தல் ஆணையர்  ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
“எந்தக்கட்சிக்கும் ஓட்டுப்போட விருப்பம் இல்லாதவர்கள் நோட்டா சின்னத்தில் வாக்களிக்கலாம்.
ஆனால் சிலர் இப்படி அளிக்கப்படும் ஓட்டுக்கள், 35 சதவிகிதம் அளவுக்கு மேல் இருந்தால், அந்தத் தொகுதியில் தேர்தல் வெற்றி ரத்து செய்யப்படும் என்று தவறான தகவல் பரப்புகிறார்கள்.
மேலும்,” அந்தத் தேர்தலில் போட்டியிட்ட எந்தக்கட்சியும் மீண்டும் போட்டி போட முடியாது. அதுமட்டுமல்லாமல், அவர்களின் வாரிசுகளும் அரசியலில் ஈடுபட முடியாது.
எனவே 6 மாத காலத்துக்கு ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டுவிடும். அதன் பின்பு மீண்டும் தேர்தல் நடத்தப்பட்டு புதிய அரசியல்வாதிகள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த வகையில் அரசியல் தூய்மையாகிவிடும். இந்த அரசியல் சட்டம் தெரியாமல் நாம் இருக்கிறோம். இதை மற்றவர்களுக்கும் தெரியப்படுத்துங்கள் – இப்படிக்கு உங்களில் ஒருவன்’’ என்ற ஒரு தகவல் பரப்பப்பட்டு வருகிறது.
இது புரளி மட்டுமல்ல..  தவறான தகவலாகும். தேர்தல் தொடர்பாக மக்களின் கவனத்தை திசை திருப்பும் இதுபோன்ற புரளிகளை பரப்பினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” – இவ்வாறு ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார்.

More articles

Latest article