
இன்னும் அதிகமாக எதிர்பார்க்கிறோம்..
முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாளுக்கு கட்சிக்காரார்கள் என்னென்னமோ செய்வார்கள்.. அது அவர்கள் விருப்பம்..
அம்மா உணவகத்தில் பிப்.24 ந்தேதி நாள் முழு வதும் சர்க்கரைப் பொங்கல் மற்றும் விலையில்லா உணவு வழங்கப்படும் என்று சென்னை மேயர் சைதை துரைசாமி சொல்கிறார்.
அம்மா உணவகம் என்பது மக்களின் வரிப்பணத்தில் இயங்குவது. அங்கே அரசு செலவில் முதலமைச்சரின் பிறந்த நாளை கொண்டாடுவது எந்த வகையில் நியாயம்? என்று கேட்டால் கோபம் வரும்.
அதனால், அதைவிட்டுவிட்டு, அன்றைய தினம் அரசு பேருந்துகளில் கட்டண சலுகை அறிவிப்பு வருமா என்று எதிர்பார்ப்பு நிலவு கிறது என சொல்லி அவர்களை குஷிப்படுத்துவோம்..

Elumalai Venaktesan