நினைவலைகள்: ரஜினிக்கு நாயகியாக நடிப்பதை தவிர்த்தேன்! ஜெயலலிதா கடிதம் !

Must read

எம்.ஜி.ஆர், சிவாஜி என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து பல வெற்றி படங்களை கொடுத்தவர் ஜெயலலிதா. தமிழ் திரையுலகில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்தவர் என்பது குறிப்பிடதக்கது. இந்நிலையில் 1980களில் தனக்கான பட வாய்ப்புகளை குறைத்து கொண்டு அ.தி.மு.க கட்சி பணிகளில் கவனம் செலுத்தி வந்தார். இந்த நிலையில், வட இந்தி இதழான காஸ்பாத், இதழில், ஜெயலலிதா சினிமா வாய்ப்பிற்காக போராடி வருவதாக செய்தி வெளியிட்டது. இதற்கு மறுப்பு தெரிவித்து ஜெயலலிதா எழுதிய கடிதம் தற்போது வெளியாகி உள்ளது.
அக்கடிதத்தில், “தயாரிப்பாளர் பாலாஜி எடுக்கும் பில்லா திரைப்படத்தில் ரஜினிகாந்த் ஜோடியாக நடிக்க என்னை அணுகினர். , ஆனால் அதை தான் ஏற்க மறுத்துவிட்டதால், நடிகை ஸ்ரீ பிரியாவிற்கு அந்த வாய்ப்பு போனது. மேலும் ரஜினிகாந்த் தமிழில் சூப்பர்ஸ்டார் பாலாஜி மிக பெரிய தயாரிப்பாளர். ஆனாலும் நான் இந்த வாய்ப்பை மறுத்தது தங்களுக்கு தெரியுமா? நான் கடவுள் அருளால் போதிய நிதி ஆதாரத்தோடும், நிம்மதியாக இருக்கிறேன். எனக்கு மனதிற்கு பிடித்த வாய்ப்புகள் கிடைக்காததால் மட்டுமே தான் நடிக்க மறுத்துவருகிறேன்” என்று ஜெயலலிதா எழுதியுள்ளார். அந்த கடிதம் இதோ..15409512_1032944356849774_1098733773_o
15354303_1032944353516441_408751393_o

Support patrikai.com

பத்திரிக்கை டாட் காம் இணையதள செய்திகளை அதிகளவு விரும்பி படிப்பதற்கு நன்றி. சிறந்த முறையில் செய்திகளை தொடர்ந்து வழங்க பத்திரிக்கை டாட் காம் குழுவிற்கு உங்கள் நிதிப் பங்களிப்பை வழங்கி ஆதரவளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். தொடர்ந்து பல்வேறு கோணங்களில் செய்திகளை வழங்கவும், பதிவு செய்யப்படாத அரிய செய்திகளை ஆவணப்படுத்தவும் உங்கள் நன்கொடை உதவிகரமாக இருக்கும் என்பதில் எந்த ஒரு ஐயப்பாடும் இல்லை.

More articles

Latest article