திரைப்பட பின்னணி பாடகி மர்ம மரணம்!

Must read

1454733373-297
கேரள இசையமைப்பாளரின் மகளும், தமிழ் திரைப்பட பின்னணி பாடகியுமான ஷான் ஜான்சன் சென்னையில் தனது வீட்டில் மர்மமான முறையில் இறந்துகிடந்தார்.
கோடம்பாக்கம் சக்கரபாணித் தெருவைச் சேர்ந்த ஷான் ஜான்சன் (29), கேரள இசையமைப்பாளர் ஜான்சனின் மகளான இவர், மேற்கத்திய இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்தார்.
தமிழில் எங்கேயும் எப்போதும், பறவை உள்ளிட்ட பல படங்களில் பாடல்களையும் ஷான் பாடி இருக்கிறார். .
கணவரை விட்டு பிரிந்து வாழ்ந்த அவர், மயிலாப்பூரில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் விற்பனைப் பிரிவு மேலாளராக வேலை பார்த்து வந்தார். .
கடந்த வெள்ளிக்கிழமை காலை முதலே  இவரது வீட்டுக் கதவு  திறக்கப்படவில்லை.  . நண்பகலில் ஷான் ஜான்சன் வீட்டுக்கு வந்த நண்பர்களும், உறவினர்களும் கதவை வெகுநேரம் தட்டினர் அப்படியும் திறக்கப்படாததால் சந்தேகமடைந்து கதவை உடைத்து உள்ளே சென்றனர்.. அங்கு  ஷான் ஜான்சன்  இறந்து கிடந்தார். தகவலறிந்த அசோக்நகர் போலீஸார் அங்கு சென்று, விசாரணை நடத்தி வருகிறார்கள்.
 

More articles

Latest article