ஜெர்மனியில் அகதிகள் முகாமுக்கு தீ வைப்பு
ஜெர்மனியில் அகதிகள் முகாமுக்கு தீ வைப்பு

சாக்சோனி:
ஜெர்மனியில் அகதிகள் முகாமுக்கு தீ வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஐரோப்பா நாடுகளில் அகதிகள் குடியேறி வருவதால் கற்பழிப்பு மற்றும் கொள்ளைச் சம்பவங்கள் நடப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.
இதனால் அகதிகள் குடியேறுவதற்கு அந்நாட்டு மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் ஐரோப்பா ஒன்றியத்தில் உள்ள கிழக்கு ஜெர்மனியின் சாக்சோனி பகுதியில் அகதிகள் தங்கியிருந்த ஓட்டலுக்கு தீ வைக்கப்பட்டது.
பவுட்சனில் ஹசேன்ஹோப் என்ற ஓட்டல் அகதிகள் தங்குவதற்கு ஏற்ற வகையில் மாற்றி அமைக்கப்பட்டது. அங்கு அகதிகளாக வந்திருந்த பலர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இது அந்த பகுதியை சேர்ந்த சிலருக்கு தெரியவந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த சிலர் ‘இது எங்களது இல்லம்.. அனைவரும் வெளியேறுங்கள்’ என்று கோஷமிட்டனர்.
அங்கு பஸ் மறியலும் நடந்தது. இந்நிலையில் அந்த ஓட்டல் நேற்றிரவு திடீரென தீப் பற்றி எரிந்தது. தகவலறிந்த தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து போராடி தீயை அணைத்தனர்.
இந்த தீ விபத்துக்கு சதி வேலை காரணமாக இருக்கும் என்று முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக மூன்று பேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இந்த தீ விபத்தில் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை. எனினும் நள்ளிரவு நேரத்தில் நடந்த உற்சாக கொண்டாட்டத்தின் போது இந்த தீ வைப்பு சம்பவம் நடந்ததிருப்பதாக தெரியவந்துள்ளது.