1

 

திரைத்துறையைச் சேர்ந்த சிலர்,   வெள்ள நிவாரண பணிகளில் ஈடுபடுவதை அவர்களது ரசிகர்கள் மட்டுமின்றி பொதுவான நபர்கள் பலரும் பாராட்டி வருகிறார்கள். இந்த நிலையில், தனது வித்தியாசமான பார்வையை  முகநூலில் பதிவு செய்திருக்கிறார்,  இளைய தலைமுறை கட்சியின் முதன்மைச் செயலாளர் இனியன் ஜான். அவரது பதிவு:

“சினிமாத் துறை மூலமாக 2006க்கு முன்னரே 400 கோடி ரூபாய் கேளிக்கை வரியாக தமிழ் நாட்டு அரசுக்கு வருவாய் வந்தது. கருணாநிதியின் 2009-2010 ஆட்சிக்காலத்தில் அந்த வருவாய் வெறும் 10.62 கோடி ரூபாய் என குறைந்தது.

தமிழில் பெயர் வைத்தால் போதும்… தமிழ் பண்பாட்டைச் சீரழிக்கும் கருத்துகள் இருந்தாலும் கவலை இல்லை. பெயர் தமிழில் இருந்தால் போடும், செக்ஸ் படத்திற்கு கூட வரி விலக்கு பெற முடியும் என புதிய அரசாணை வழியாக இன்று ஆண்டிற்கு 1000 கோடி அரசின் வருவாயை இழக்கச் செய்த புண்ணியவான் கருணாநிதி.

இனியன் ஜான்
இனியன் ஜான்

கருணாநிதி பார்வையில் சந்திரமுகி, சிவாஜி, கோவா, ஒரு கோட்டார் கட்டிங், எந்திரன் எல்லாம் தமிழ் ! சினிமா வள்ளல் கருணாவின் ஆட்சியில் பையூரில் திரைஉலகைச் சார்ந்தவர்களுக்கு வீடு கட்ட வழங்கப்பட்ட 90 ஏக்கர் நிலத்தின் இன்றைய சந்தை மதிப்பு பல ஆயிரம் கோடி ரூபாய்.

கேளிக்கை வரிப் பணம் முழுக்க திரைத்துறையின் நடிகர்கள், மற்றும் இயக்குனர்கள், ஜாம்பவான்கள், தயாரிப்பாளர், விநியோகம் செய்வோரிடம் குவிந்து கிடக்கிறது. ஆண்டுக்கு ஏறத்தாழ ஆயிரம் கோடி மக்கள் பணத்தைத் திருடிவிட்டு… வெறும் 10 லட்சம் 20 லட்சம் வெல்ல நிவாரணம், முதலவர் பொது நிவாரண நிதி என்று கொடுத்துவிட்டு வள்ளல் வேடம் போடுகிறது கோமாளிகளின் கூட்டம்.

இந்த ஆயிரம் கோடியை வசூல் செய்தால்… ஆண்டு தோறும் 1 லட்சம் இளைஞர்களுக்கு ரூபாய் 1 லட்சம் வீதம் சுய தொழில் தொடங்க இலவசமாகவே பணம் தரலாம். 5 ஆண்டுகளில் 5 லட்சம் இளைஞர்களின் வாழ்வை வளப்படுத்தி 5 லட்சம் குடும்பத்தை வாழ வைக்கலாம்.

இந்த கோமாளி நடிகர்களுக்கு ரசிகர் மன்றம் அமைத்து, கட்அவட்களுக்கும் பேனர்களுக்கும் பால் அபிசேகம் செய்யும் முட்டாள்களை என்ன செய்யலாம்? சினிமாத்துறைக்கு வாரி வாரி வழங்கி நாட்டைச் சீரழித்த கருணா கூடாரத்தை என்ன செய்யலாம்?” இவ்வாறு தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார் இனியன் ஜான்.