கோவை வந்த மோடிக்கு கறுப்பு கொடி! 200  பேர் கைது!

Must read

12509638_1044115365707405_6866935237743333148_n
 
கோவை:
ருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையின் புதிய கட்டிட திறப்பு விழாவுக்காகவும், பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காகவும் பிரதமர் நரேந்திர மோடி இன்று கோவை வந்துள்ளார்.
இந்த நிலையில் மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து தந்தை பெரியார் திராவிடர்  கழகத்தை சேர்ந்த கு.ராமகிருஷ்ணன் தலைமையில்   இருநூறுக்கும்  மேற்பட்டோர் அவினாசி சாலை லட்சுமி மில் சந்திப்பில் கருப்புக் கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
12662626_1044115405707401_7209383870237540280_nஅப்போது அவர்கள் ஐதராபாத் பல்கலைக்கழக மாணவர் ரோஹித் வெமுலாவின் மரணத்திற்கு காரணமான மோடியே திரும்பி போ, வெமுலாவின் மரணத்திற்கு காரணமான மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியை கைது செய், தலித் மக்களுக்கு எதிராக செயல்படும் மோடியே திரும்பி போ என்று முழக்கமிட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் தற்போது, அவினாசி சாலையில் இருக்கும் லட்சுமி திருமண மண்டபத்தில் அடைத்து வைக்கபட்டுள்ளனர்.

More articles

Latest article