கும்ப ராசி
கும்ப ராசி

உதவும் உள்ளம் கொண்ட கும்ப ராசி அன்பர்களே..
ராகுவின் பலன்கள்:
இதுவரை ராசிக்கு 8-ல் அமர்ந்துகொண்டு அடுக்கடுக்கான சோதனைகளைத் தந்த ராகுபகவான் இப்போது 7-ம் வீட்டில் அமர்ந்து உங்கள் ராசியைப் பார்க்கிறார். இதனால் இதுவரை தடைபட்ட சில வாய்ப்புகளை உங்களைத் தேடி வரும்.,உங்களுடைய திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும். மனதில் சோர்வு நீங்கி உற்சாகம் பெருகும். துடிப்புடன் செயல்பட்டு வெற்றிகளைக் குவிப்பீர்கள். . களத்திர ஸ்தானத்தில் ராகு அமர்வதால் தம்பதியினரிடையே மனக்கசப்பு ஏற்படும். சில தம்பதிகள் பிரிவையும் சந்திக்க நேரிடும். ஆகவே ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து நடப்பது சிறப்பு.
வாழ்க்கைத் துணைக்கு, உடல் உபாதை ஏற்படும். குடும்பத்தினருடன் மனம் விட்டுப்பேசுங்கள். அவர்களுக்குத் தெரியாமல் எந்த ஒரு பெரிய முடிவையும் எடுத்து சிக்கிக்கொள்ளாதீர்கள். முக்கிய ஆவணங்களில் கையெழுத்திடுவதற்கு முன்பாக ஒன்றுக்கு நான்குமுறை சிந்தித்து, நலம் விரும்பிகளை கலந்தாலோசியுங்கள். . அவ்வப்போது உறக்கமில்லாமல் போகும். திருமணத்தை எதிர்நோக்கியிருப்பவர்கள், அது குறித்த முடிவை தள்ளிப்போடுங்கள். உத்தியோகம், வியாபாரத்தின் பொருட்டுக் குடும்பத்தை பிரிய வேண்டிய நிலை ஏற்படலாம். வாகனத்தில் செல்லும் போது கூடுதல் கவனம் தேவை.
08.01.2016 முதல் 10.03.2016 வரை.. தடைபட்ட சுப காரியங்கள் இனிதே நடக்கும். அரசால் அனுகூலம் உண்டு. ஆனாலும், உடல் நிலையில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். வாழ்க்கைத் துணையின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. . 11.03.2016 முதல் 15.11.2016 வரை .. எதிர்பார்த்திருந்த பணம் கைக்கு வரும். தங்கம் மற்றும் வெள்ளிப் பொருட்கள் வாங்கும் யோகம் உண்டு. வீடு வாங்க எதிர்பார்த்திருந்த கடன் உதவி கிடைக்கும்.
வழிபாடு: கோவை மாவட்டம் முட்டம் ஸ்ரீநாகேஸ்வரரை வணங்குங்கள்
 
கேதுவின் பலன்கள்:
இதுவரை உங்கள் ராசிக்கு இரண்டாமிடத்தில் நின்றுகொண்டு உங்களுக்கு நிறைய பிரச்சினைகளை கொடுத்து வந்த கேது பகவான் இப்போது உங்கள் ராசிக்குள்ளேயே வந்து அமர்கிறார். ஆகவே இனி நல்ல காலம்தான். பேச்சு சாதுர்யத்தாலேயே காரியங்களை வென்றெடுப்பீர்கள். இதுவரை இருந்த சிக்கலான காலட்டம் முடிந்து நல்ல காலம் துவங்குகிறது. குடும்பத்தில் நிலவிய மனக்கசப்புகள் விலகி, அமைதி திரும்பும். ஆனால், ராசிக்குள் கேது அமர்வதால் உடல் நலம் பாதிக்கும். கவனம் தேவை.
08.01.2016 முதல் 12.07.2016 வரை பழைய பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பீர்கள். மகள் திருமணம் குறித்து நல்ல செய்தி வரும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். . குடும்பத்தில் மங்கள காரியங்கள் நடக்கும். மாற்றுமதத்தவர்கள் உதவி செய்வார்கள். 21.03.2017 முதல் 25.07.2017வரை துறுதுறுப்பாக செயல்பட்டு காரியங்களை செய்து முடிப்பீர்கள். அதே நேரத்தில் வாகனத்தில் செல்லும்போது கூடுதல் கவனம் தேவை.
பொதுவாக இந்த ராகு கேது பெயர்ச்சி ஓய்வின்றி உழைக்க வைக்கும். அதே நேரம், அதற்குரிய பலனைத்தரும்.