🌍அரக்கோணத்தில் 25 நாளில் அடுத்தடுத்து கொலை தாயை கொன்றது போல மகளும் கழுத்தறுத்து கொல்லப்பட்டார்
🌍திருச்சியில் போலி ஓட்டுநர் உரிமம் தயாரித்து விற்ற 4 பேர் கைது. திருச்சியில் போலி ஓட்டுநர் உரிமம் தயாரித்து வழங்கிய 4 பேரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர். இவர்கள் 200-க்கும் மேற்பட்டோருக்கு போலி ஓட்டுநர் உரிமம், போலி வாகன காப்பீடு உள்ளிட்டவற்றை விற்பனை செய்திருப்பது தெரியவந்துள்ளது.
elepahnat
🌍குட்டியானை உயிரிழப்பு: ஒருவர் கைது. கோவை மாங்கரையில் காட்டுப்பன்றிக்கு வெடிவைத்து குட்டியானை இறந்த விவகாரத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குப்பநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த முருகன் கைது செய்யப்பட்டுள்ளார், மேலும் ரங்கராஜ், ராஜேந்திரன் ஆகியோரை தீவிரமாக தேடி வருகின்றனர். காட்டுப்பன்றிக்கு வைத்த வெடியில் சிக்கி காயம் அடைந்த குட்டியானை கடந்த 29ம் தேதி உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
🌍பாசனத்திற்காக பவானிசாகர் அணை திறப்பு. முதல் போக பாசனத்திற்காக பவானிசாகர் அணையிலிருந்து தண்ணீர் திறக்க தமிழக முதல்வர் ஜெயலலிதா நேற்று உத்தரவிட்டார். இதனையடுத்து இன்று அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.அரக்கன்கோட்டை, தடப்பள்ளி, காளிங்கராயன் வாய்க்கால்கள் மூலம் முதல் போக பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. கொடிவேரி அணை வழியாக செல்லும் தண்ணீரால் 40,247 ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெற உள்ளன.
800px-Bhavanisagar_dam
🌍சென்னை – அருகே எருமையூர் வெளிவட்ட சாலை அருகே காதல் ஜோடிகளான சசிகுமார், சந்தியா ஆகியோர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர். எச்சூரை சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது. சம்பவம் குறித்து அறிந்த போலீசார், இருவரின் உடல்களை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
🌍தாய்லாந்தில் மேலும் இரட்டை குண்டுவெடிப்பு: ஒருவர் பலி. தாய்லாந்து நாட்டில் மற்றொரு நகரத்தில் நடந்த மேலும் இரட்டை குண்டுவெடிப்பில் ஒருவர் உயிரிழந்துள்ளார் மற்றும் 4 பேர் படுகாயமடைந்தனர். ஹாவ் ஹின் என்ற பகுதியில் நடந்த குண்டுவெடிப்பு தாக்குதலில் 21 பேர் படுகாயமடைந்தனர்.
🌍ஐஎஸ் உருவாக ஒபாமாவே காரணம் : டிரம்ப் பேச்சால் பரபரப்பு. குடியரசுக் கட்சி சார்பில் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் டொனால்டு டிரம்ப், தற்போதைய அதிபர் ஒபாமாவை ஐ.எஸ். பயங்கரவாதத்துடன் ஒப்பிட்டு கடுமையாக சாடியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
drump
🌍சாட்டார்புரில் கனமழை: ஆபத்தான நிலையில் தண்ணீரை கடக்கும் மாணவர்கள். மத்திய பிரதேச மாநிலம், சாட்டார்புர் மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனையடுத்து அன்ரில் அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டதால் பள்ளி மாணவர்கள் ஆபத்தான நிலையில் தண்ணீரை கடந்து சிரமத்துடன் பள்ளிக்கு செல்கின்றனர்.
🌍தலித்துகளுக்கு எதிரான தாக்குதல் விவகாரத்தில் குற்றம் இழைப்போர் மீது மாநில அரசுகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்–மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்
🌍ஒலிம்பிக் கலப்பு இரட்டையர் டென்னிஸ்; சானியா ஜோடி கால் இறுதிக்கு தகுதி
🌍சாதி பெயரை சொல்லி கொலை மிரட்டல் –சசிகலா புஷ்பா மீது மேலும் ஒரு பரபரப்பு புகார்
a
🌍ஆன்ட்ரிக்ஸ்-தேவாஸ் ஒப்பந்த முறைகேடு வழக்கில் இஸ்ரோ முன்னாள் தலைவர் மாதவன் நாயர் மீது சிபிஐ நேற்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.
🌍இந்தியா – இலங்கை இடையே, பாலம் கட்ட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுவது, ஆதாரமற்ற தகவல்– இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா.
🌍சவுதி அரேபியாவில் வேலை இழந்து தவித்து வந்த இந்தியர்களில் ஒரு பகுதியினர் ஜெடாவில் இருந்து டெல்லி வந்தடைந்தனர்.
🌍மேற்கு தில்லியில் சுபாஷ் நகர் பகுதியில் சாலை விபத்தில் பலத்த காயமடைந்து வலியால் சுமார் ஒரு மணி நேரம் துடித்துக் கொண்டு உயிருக்குப் போராடிய காவலாளியைக் காப்பாற்ற யாரும் முன் வரவில்லை. இதனால், அவர் உயிரிழந்தார். மனித நேயமற்ற இச்சம்பவம் அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்புக் கேமராவில் பதிவாகியுள்ளது.