கற்பனை நாயகனின் காதல் களியாட்டங்கள்! – உமையாள் 8

Must read

k8

அவ்வப்போது கவிதைகள் எழுதி post பண்ணும் நாயகி சில நேரம் only me ல

தவறுதலா post பண்ணிடுவா ஸ்ரீ உன்னோட post வரலன்னு சொல்ல செக் ஸ்ரீ id

குள்ள போக,( பாஸ் வேர்டு ஸ்ரீ யோடாது நாயகிக்கும், நாயகியோடது ஸ்ரீ கும்

தெரியும். ) நாயகனிடம் msg வர பொதுவான நண்பன் தானே என open பண்ண,

வெட்டவெளிச்சமாகிறது. சற்று தடுமாறினாலும் ஆன் லைனில் இருப்பது ஸ்ரீ

அல்ல தான் என்பதை சொல்லிவிட்டு வர, ஸ்ரீ பாஸ் வேர்ட் மாத்துகிறாள். அதை

நாயகியிடமும் சொல்லவில்லை. எப்பவும் போல post செக் பண்ண ஸ்ரீ id open

பண்ண பாஸ் வேர்ட் மாறியிருப்பதை உணர்கிறாள். ஏற்கனவே msg பார்த்ததை

இருவரிடமும் சொல்லிவிட்ட நிலையில் ஸ்ரீ பாஸ் மாற்றிவிட்டேன் என்று

சொல்லியிருக்கலாம். நட்பு என்று எல்லை மீறி உரிமை எடுத்துகொண்டது தவறு

என்று மனம் வருந்தி ஸ்ரீ யிடம் மன்னிப்பும் கேட்கிறாள். சற்று இடைவெளி

விழுகிறது தோழியருக்குள். ஸ்ரீ மனம் வருந்த நாயகியுடனான நட்பை புதுப்பிக்க

முயற்சிகிறாள். நாயகன் எதுவும் நடக்காது போல பேசிக்கொண்டு இருக்கிறான்.

ஸ்ரீ எல்லா விசயங்களையும் நாயகியிடம் சொல்கிறாள். முதல் சந்திப்புக்கு

முன்பே இருவரும் நெருக்கமாக பேசிக்கொண்டதை சரி அவர்கள் சொந்த

விசயத்தில் தலையிட விரும்பவில்லை நாயகி. தன்னிடம் இருவரும் நட்போடு

இருப்பது போதும் என்று முடிவுக்கு வருகிறாள். உண்மையான நட்போடு

இருப்பதை உணரவும் செய்கிறாள். நாயகன் அவள் உடல் நலம் பற்றி விசாரிப்பது,

தன் காதலி பற்றி பேசுவது, ஊருக்கு சென்றால் சொல்லிவிட்டு செல்வது, ஊரில்

இருந்தாலும் போட்டோ எடுத்து அனுப்புவது,

உன்கிட்ட மட்டும் தான் எல்லாம் சொல்றேன் loosu… இப்படி நாயகன்

உண்மையான நட்போடு தான் இருக்கிறான் நாயகன் என்று நினைக்க, அடுத்த அடி

விழுகிறது. சிவா வோடு chat செய்கிறாள் நாயகி.( தீ காயம் கேள்விப்பட்டு நேரில்

வந்தவர் )

ஹாய்

ஹேய் என்ன என்னோட சட் பண்ற ?

ஏ… உன்னோட பேசமாட்டெனா! பேசுவேன்.

நிறுத்து உன் frd ஊருக்கு போயிருக்கான் அதானே !

உனக்கு எப்படி தெரியும். (இருவரும் frd கூட இல்ல )

அதுவா என்னோட frd மதி சொல்லுச்சு. மதி அவனோட ரொம்ப நெருக்கம். அவன்

என்ன பண்ணினாலும் அதுகிட்ட சொல்லிடு தான் பண்ணுவானாம். T. நகர் ல

கடை வச்சிருக்கு அடிக்கடி அங்க போவானாம்.

இப்படி இன்னும் சில விஷயங்கள் சொல்ல, அது சம்மந்த பட்டவர்கள்

சொல்லாமல் இவ்வளவு விஷயங்கள் தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்பதை

உணர்கிறாள். நாயகன் சொன்னது போல தன் அவனோட best frd இல்ல, frd ல

ஒருத்தி மட்டும் தான் என்பது புரிகிறது. இந்த குழப்பங்கள் தீரும் முன்னரே

மூன்றாவதாய் ஒன்று வருகிறது. நாயகிக்கு ஒரு call வருது.

Hello

அக்கா நான் காவியா உங்க fb frd (நாயகனுக்கும், நாயகிக்கும் முயுச்வல் frd அந்த

பெண் சில நேரம் ஹாய், ஹலோ சொல்லியிராள் )

சொல்லு டா…

அக்கா உங்க கவிதைகள் எனக்கு ரொம்ப பிடிக்கும்.

mm… Thank U டா !

அக்கா தமிழ்ல எப்படி டைப் பண்றீங்க ?

ஏன் டா நீயும் எழுதபோறீயா ?

நீங்க வேறக்கா எனக்கு எழுதலாம் தெரியாது. சும்மா Commend போட தான்.

Mm யாருக்கு கமென்ட் ?! டா..

More articles

2 COMMENTS

Latest article