4

ஸ்ரீ யின் மேல் கோபம் இல்ல வருத்தம் மட்டுமே இருப்பதால் கொஞ்சம் இயல்பாக முயற்சிக்கிறாள் நாயகி. என்றாலும் பழைய ஒட்டுதல் இல்லை இருவருக்கும்.
இந்த நிலையில் நாயகனோடு சம்மந்த படுத்தி ஒரு நட்பிடம் இருந்து நக்கலாய் ஒரு msg வருகிறது நாயகி inbox ற்க்கு. கோவம் வந்தாலும் கட்டுப்படுத்திக்கொண்டு “அவன் எனக்கு நண்பன் மட்டுமே நீங்க நினைப்பது போல இல்ல ” என்கிறாள்.
” சும்மா சொல்லாதிங்க பா.. எல்லாம் தெரியும் எனக்கு ”
” என்ன தெரியும் உங்களுக்கு !?” என்று நாயகி கேட்க
” எல்லாம் தெரியும். நீங்க அவருக்காக கையை எரிச்சுகிட்டது, ரெண்டு பேரும் போட்டோ எடுத்துகிட்டது எல்லாம் தெரியும் பா. நீங்க மழுப்ப வேண்டாம் ” என்றது நாயகிக்கு தூக்கிவாரி போடுகிறது.
” இதெல்லாம் உங்களுக்கு யார் சொன்னது !?” என்று கேட்கிறாள் நாயகி. சரியான பதில் வரவில்லை அந்த நபரிடம் இருந்து. நாயகனுக்கு தனக்கும் பொதுவான நட்பு வட்டத்தில் இருந்து இதுபோன்ற msg வருவதை உணரும் நாயகி அவனிடமே கேட்டுவிடுகிறாள்.
” என்ன நடக்குது இங்க ?”
” என்ன ?” வெறுப்போடு கேட்கிறான் நாயகன்.
” தப்பா பேசுறாங்க ” பொதுவாக சொல்கிறாள்.
” அதான் ஊர் full ல சொல்லிவசிருக்கியே அதான் ” நாயகன் வேறு கத்த திகைக்கிறாள் நாயகி.
” யார பத்தி தப்பா நா சொன்னேன் !!! “அவனிடமே கேட்கிறாள்.
” அது உனக்கு தான் தெரியும்… ” என்கிறான்.
தன்னோட பிரச்னையை பேசவந்தா இவன் தன்னையே பிரச்சனன்னு சொல்வது இன்னும் டென்சன் கொடுக்க
” எதுவா இருந்தாலும் நேரடியா பேசு நா யார்கிட்ட என்ன சொன்னேன் ” கோவமாக கேட்கும் நாயகியிடம்.
” நீ யார் கிட்ட தப்பா பேசலையா? யோசிச்சு பாரு தெரியும் ”
” டென்சன் பண்ணாம சொல்லு என்ன அந்த அபிநயா கிட்ட பேசினதை சொல்றீயா ! அவங்க கிட்ட என்ன தப்பா சொன்னேன் சொல்லு…” கோவமாக சண்டை போடுகிறாள்.
” ஏன் காவியாவை பத்தி சொல்லியிருக்க… அது போதாதா என்னமோ யோக்கியம் மாதிரி பேசுற… ” அவனும் சண்டை போட
” ஆமா சொன்னேன். இல்லன்னு சொல்லலையே… ஆனா என்ன பொய் சொன்னேன்.. சொல்லு ! உண்மைய தானே சொன்னேன்… ஏற்கனவே உன்கிட்டயும் சொன்னேனே! அதை தானே சொன்னேன் அபி கிட்ட… ”
” உண்மையோ பொய்யோ அதை அங்க சொல்லவேண்டிய அவசியம் என்ன !? ”
” அய்யா சாமிஇ அன்னைக்கு அபி இருந்த மனநிலையை மாத்த ஏதோ சொல்லபோய் உளறி கொட்டிய விஷயம். அதுக்கு இவ்வளவு பிரச்சன வரும்னு தெரிஞ்சிருந்தால் பேசியிருக்கவே மாட்டேன் … தப்புனா மன்னிப்பு கேட்டுகிறேன் ஆளை விடு… ” அவள் பிரச்னையை மறந்து அவனிடம் மன்னிப்பு கேட்டு கத்திக்கொண்டு இருக்கிறாள். அவனோ மேலும் மேலும் அவள் மேலையே பழி போடுகிறான்.
” எப்படியோ என்னை அசிங்க படுத்திட்ட! இப்போ உனக்கு நிம்மதி தானே… ” என்கிறான்.
” ஏன் இப்படி பேசுற நீ மனசாட்சி இல்லாம…”
” உனக்கு மனசாட்சி இருக்கா… என்னை கேக்குற… ” என்று கேட்கிறான் நாயகன்.
இருவருக்குள்ளும் நடக்கும் வாக்குவாதம் முற்ற, நாயகியையே குறை சொல்லும் நாயகன் அவள் பக்கம் எந்த நியாயத்தையும் கேட்க தாயாராக இல்லை.

நாயகி செய்த ஒரே தவறு காவியாவை பற்றி அபிநயாவிடம் சொன்னது மட்டுமே. நாயகன் ஒரு புறம் தவறாக புரிந்துகொண்டு சண்டை போடுவதும் இன்னொரு பக்கம் மற்றவர்கள் நாயகியையும் , நாயகனையும் இணைத்து தப்பா பேசுவதும் எதற்கு இந்த பிரச்சனை என்று நினைக்கும் நாயகி fb யை டி ஆக்டிவேட் பண்ண முடிவெடுத்து ஒரு post போடுறா fb விட்டு போறேன்னு.
அவளே எதிர்பாராத அளவிற்கு அந்த பதிவில் வரும் கமென்ட்ஸ்களை பார்த்து டு ஆச்சர்யப்படுகிறாள். எவ்வளவு அன்பு உள்ளங்களை தன் எழுத்து சம்பாதித்து தந்திருப்பதை பார்த்து திகைக்கிறாள். தன் மேல் நிறைய அன்பு உள்ளங்கள் மதிப்பும் மரியாதையும் வைத்திருக்க, ஒரு கூட்டம் கேவலமாக பேசுவதும் இருக்க தானே செய்கிறார்கள் என்று feel பண்ணுகிறாள்.

அவளை inbox ல் காயப்படுத்திய நாயகனே open கமென்ட் டில் பொது வாழ்கையில் சில விஷயங்கள் கண்டுக்கொள்ளாமல் நாம் நாமாக இருக்க வேண்டும் என்பது போல் ஒரு கமென்ட் போட, மீண்டும் அவனிடமே “பார்த்தியா எவ்வளவு பேர் என் மேல அன்பா இருக்காங்கன்னு ! எனக்கே இப்போ தான் புரியிது… ஆனாலும் நான் போறேன் அப்போ உனக்கு பிரச்சனை தீர்த்திடும் தானே… ”
” லூசா நீ… முதலில் அந்த போஸ்ட்ட delete பண்ணு ” என்கிறான்.
மேலும் நாயகி மேல் உண்மையான அன்பும், மரியாதையும் வைத்திருக்கும் சிலரோ chat, call என எல்லாவகையிலும் அவளை சமாதானம் பண்ணமுயற்சிப்பதும், மீண்டும் fb வருமாறும் வற்புறுத்த வருத்தங்களுக்கு, ஆச்சர்யங்களுக்கும் நடுவில் அமைதியாக இருக்க முயற்சிக்கிறாள் நாயகி.

(தொடர்ச்சி வரும் சனிக்கிழமை…)