அ

 

பொதுவாக  வெளிநாடுகளில் வாழ்பவர்கள் பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளியெ வாங்கி சமைத்து உண்பார்கள். இப்போது இந்தியாவிலும் அந்த பழக்கம் பரவிக்கொண்டிருக்கிறது.

அவர்களுக்காகத்தான் இந்த எச்சரிக்கை பதிவு.

“பதப்படுத்தப்பட்ட இறைச்சியை சாப்பிடுவதால் புற்றுநோய் (Cancer) ஏற்படும் ஆபத்து உள்ளது என உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை செய்துள்ளது.

பிரிட்டனில் 9 % பேர் புகையிலைப் பழக்கத்தாலும் 3 % பேர் பதப்படுத்தப்பட்ட இறைச்சி சாப்பிடுவதாலும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக ஆய்வில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

அது மட்டுமல்ல..  இறைச்சியை பதப்படுத்தி ஏற்றுமதி செய்வதற்கு அதிக
தண்ணீர் செலவிடப்படுவதால் எதிர்காலத்தில் இந்தியாவில் தண்ணீர் தட்டுப்பாடு அதிகரிக்கும் அபாயமமும் வருமாம்.

ஆகவே  பதப்படுத்தப்பட்ட இறைச்சியை வாங்கி உண்ணும் பழக்கத்தை கைவிடுங்கள்.

இன்னொரு எச்சரிக்கை:   சமைத்த எந்த ஒரு உணவையும் நான்கு மணி நேரத்திற்கு மேல் வெளியில் வைத்து மீண்டும் சாப்பிடாதீர்கள். நான்கு மணி நேரத்தில் பாக்டீரியாக்கள் உருவாகி உணவை பாழ்படுத்த ஆரம்பித்துவிடும்.  முக்கியமாக, வெளியில் வைக்கப்படும் சோற்றில் பாக்டீரியாக்கள் எளிதில் உருவாகிவிடும்.

நான் ஆஸ்திரேலியாவில் உணவு அறிவியல் (Food Science) பற்றி படித்த பொழுது தெரிந்துகொண்டதையும் உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி.

ஜாகீர் உசேன் Zahir Hussain R Sharbudeen  https://www.facebook.com/lionrszahir