உயிரோடு நால்வரை கொளுத்திய ஐ.எஸ். பயங்கரவாதிகள்!

Must read

 

isis-burned-peoples

 

 

பாக்தாத்:

உளவு பார்த்த குற்றத்திற்காக ஈராக்கை சேர்ந்த  4 பேரை ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் உயிரோடு தீயிட்டு கொளுத்தினர்.

தனி இஸ்லாமிய நாடு அமைக்கும் நோக்கத்தில்  செயல்படும் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகள் ஈராக் மற்றும் சிரியாவின் சில பகுதிகளை கைப்பற்றி ஆட்சி செய்து வருகிறார்கள். இவர்கள் ஆளுகைக்கு உட்பட்ட பகுதிகளில் பலவித கொடூரங்களை செய்து வருகிறார்கள்.   பெண்களை பலாத்காரப்படுத்தி விற்பனை செய்வது,  சிறுவர்கள்கையில் ஆயுதம் கொடுத்து பிணைக்கைதிகளை கொல்லசெய்வது, பத்திரிகைகாரர்கள்  மற்றும் சுற்றுலா பயணிகளைகழுத்தை அறுத்து கொடூரமான முறையில் கொல்வதோடு மட்டுமல்லாமல் அதனை வீடியோ எடுத்து இணையத்திலும்உலவவிடுகின்றனர்.

இது போல் நேற்று ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிராவாதிகளால் இணையத்தில்  வெளியிடப்பட்ட வீடியோ ஒன்று  காண்போரை குலைநடுங்க செய்யும் அளவிற்கு இருக்கிறது.

தங்களைப் பற்றி  எதிரிகளிடம் உளவு சொன்னதாக குற்றம்சாட்டி நான்கு பேரை பிடித்து வரும் ஐ.எஸ் . பயங்கரவாதிகள், அவர்களின் கை, கால்களை சங்கிலியால் கட்டி,  தொங்கவிடபடுகின்றனர். பின்னர் ஒரு ஐ.எஸ். பயங்கரவாதி, அந்த நால்வரின்  மேல் பெட்ரோல் ஊற்றி தீ வைக்கிறான்.

அந்த நால்வரும் தீயால் துடிதுடித்து கதறி மரணமடைவது முழுவதுமாக வீடியோ எடுத்து வலைதளங்களில் உலவிட்டிருக்கிறார்கள் ஐ.எஸ். பயங்கரவாதிகள்.

More articles

10 COMMENTS

Latest article