rajini ilaiyaraja
சிறந்த திரைப்படங்களுக்கான 63-வது தேசிய விருதுகள் மத்திய அரசால் இன்று அறிவிக்கப்பட்டன. 2015ம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருதுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது.
விசாரணை தமிழ் சினிமாவிற்கு மூன்று தேசிய விருதுகள் கிடைத்துள்ளன. தாரை தப்பட்டை படத்திற்கு இசையமைத்தற்காக இளையராஜாவிற்கு தேசிய விருது கிடைத்துள்ளது.
தேசிய விருது வாங்கியுள்ள விசாரணை படத்துக்கும், இசையமைப்பாளர் இளையராஜாவுக்கும் நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்திற்கு வந்திருந்த ரஜினியை சந்தித்த நிருபர்களிடம், தேசிய விருது வாங்கிய விசாரணை படத்துக்கும், இளையராஜாவுக்கும் எனது வாழ்த்துக்கள்’’ என்று தெரிவித்தார்.