இன்று: 3: புலிகள் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் பிறந்தநாள்

Must read

clip_image005

தனி ஈழம் கேட்டு போராடிய விடுதலைப்புலிகள் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் 1954ம் வருடம் இதே நாளில்தான் பிறந்தார்.

1972ல் புதிய தமிழ்ப் புலிகள் என்ற அமைப்பை தனது 18-ஆவது வயதில் பிரபாகரன் தொடங்கினார். 1975ல் யாழ்ப்பாண மாநகர மேயர் அல்பிரட் துரையப்பா படுகொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டார்.

மே 5, 1976 இல் புதிய தமிழ்ப் புலிகள் இயக்கம் தமிழீழ விடுதலைப் புலிகள் என்று பெயர் மாற்றப்பட்டது.

ஈழத்தமிழர் பெரும்பாலோர் அவரைத் தமிழ் தேசியத் தலைவராக போற்றுகிறார்கள். ஆனால் இலங்கை, இந்தியா, ஐக்கிய அமெரிக்கா, பிரிட்டன்  மற்றும் பல நாட்டு அரசுகளால் அவர் ஒரு பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டார். இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலையில் அவருக்கு தொடர்பு இருப்பதாக இந்திய அரசு கருதியதால் அவரை இந்தியாவுக்கு நாடு கடத்த இந்திய அரசு முனைந்தது. இறுதியாக 2009ம் ஆண்டு நடந்த மூன்றாவது ஈழ யுத்தத்தின் போது, மே 18 அன்று முல்லைத்தீவுப் பகுதியில் பிரபாகரன் கொல்லப்பட்டதாக இலங்கை இராணுவம் அறிவித்தது[. ஆனால் விடுதலைப் புலிகளின் பன்னாட்டுத் தொடர்பாளர் செ. பத்மநாதன் , பிரபாகரன் 2009 மே 17 ஆம் நாள் இறந்ததாக அறிவித்தார் அத்துடன் அவரது மூத்த மகன் சார்ல்ஸ் அன்டனி, மகள் துவாரகா ஆகியோரும் இராணுவத்தினருடன் நடந்த போரில் கொல்லப்பட்டார்கள்[ பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரன் இலங்கை படையால் பிடிக்கப்பட்டு பிறகு சுட்டுக்கொல்லப்பட்டார்.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article