2
தமிழ் ஆட்சிமொழி

1956ம் ஆண்டு இதே தினம்தான் தமிழ் ஆட்சிமொழிச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. தமிழ் ஆட்சிமொழிச் சட்டம் நடைமுறைக்கு வந்ததை அடுத்து 1971ல் தமிழ் வளர்ச்சி இயக்ககம் தோற்றுவிக்கப்பட்டு, ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆட்சி மொழித் திட்ட ஆய்வுப் பணிகளை மேற்கொள்ள தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அமர்த்தப்பட்டார்கள். அலுவலக நிர்வாகத்தில் நூறு சதம், தமிழையே பயன்படுத்த வேண்டும், அரசு அலுவலர்கள் அனைவரும் தமிழிலே கையொப்பம் இட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.

 

3

 உருவானது உலக வங்கி

1945ம் வருடம் இதே நாளில்தான் உலக வங்கி உருவாக்கப்பட்டது. 28 நாடுகளின் ஒப்புதலுடன் உலக வங்கி குழுமம் அமைந்தது. .இது ஐந்து பன்னாட்டு அமைப்புகளை உள்ளடக்கிய குழுமமாகும். உலகளவில் பெரிய நிதி நிறுவனமான இதன் நோக்கம் ஏழை நாடுகளுக்கு கடன் உதவி அளிப்பதே.

ஐ.நா சபையின் 187 உறுப்பினர் நாடுகளும் இதன் உறுப்பினர்கள் ஆவர். இதன் தலைவரை நிதியில் பெரும்பங்கை கொண்டுள்ள அமெரிக்காவே தேர்ந்தெடுத்து நியமிக்கும். தலைவரின் பதவிக்காலம் ஐந்தாண்டுகள் ஆகும்.

 

index

பெனாசிர்புட்டோ கொலை

2007 ம் வருடம் இதே நாளில்தான் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவராக இருந்த பெனாசீர் பூட்டோ ஒரு தற்கொலைத் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டார். பாகிஸ்தானின் பிரதமராக இருமுறை (1988–1990 மற்றும் 1993–1996) பதவி வகித்தவர் பெனாசிர். பாகிஸ்தானின் ஒரே பெண் பிரதமர் என்ற பெருமையும் இவருக்கு உண்டு