மீண்டும் வழிகிறது இந்துத்துவா மை!

Must read

qqqqq

மீண்டும் வழிகிறது இந்துத்துவா மை!

டில்லி: 

காஷ்மீர் சட்டமன்ற உறுப்பினர்கள் விடுதியில் மாட்டுக்கறி விருந்து கொடுத்ததற்காக சுயேட்சை எம்.எல்.ஏ. ரஷீத் என்பவரை பாஜக எம்.எல்.ஏ.க்கள்  கடந்த 9ம் தேதி சட்டப்பேரவையிலேயே தாக்கினர்.

இதனைக் கண்டித்து சுயேட்சை எம்.எல்.ஏ. ரஷீத் சட்டசபைக்கு வெளியே போராட்டம் நடத்தினார். போராட்டத்தின் போது அவரின் ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டனர்.

aaaஇந்த நிலையில் ரஷீத், டில்லி பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களை சந்திக்க இன்று வந்தார். அப்போது இந்துத்துவ ஆதரவாளர்கள் அவர் மீது கறுப்பு மையை கொட்டி, அவருகக்கு எதிராக கோஷமிட்டனர்.  இந்து சேனா என்ற அமைப்பினர் விஷ்ணு குப்தா என்பவரின் தலைமையில் வந்து இந்த அராஜகத்தை நிகழ்த்தி உள்ளனர்.

ஏற்கெனவே, பாகிஸ்தான் முன்னாள் அமைச்சரின் புத்தக வெளியீட்டுக்கு ஏற்பாடு செய்ததற்காக பாஜக பிரமுகர் மீது மும்பையில் சிவசேனா அமைப்பினர் கறுப்பு மையைக் கொட்டி அவமானப்படுத்தினர்.

இப்போது நடந்திருப்பது இந்துத்துவவாதிகள் இரண்டாவது முறையாக கறுப்பு மையை வீசியிருக்கிறார்கள்.

More articles

Latest article