அவசர அரைபுரிதலுடன் அரசியல் பேசும் அறிவாளிகள் : டாக்டர் ருத்ரன்

Must read

r k rudran
சமீபகாலமாக, ஐ.ஏ.எஸ்  அதிகாரி சகாயம் அரசியலுக்கு வர வேண்டும், அவரை முதல்வராக்க வேண்டும் என்று சமூகவலைதளங்களில் பலரும் எழுதி வருகிறார்கள். இது குறித்து பிரபல மனநல மருத்துவரும் சமூக ஆர்வலருமான டாக்டர் ருத்தரன் தனது முகநூல் பக்கத்தில் எழுதி இருக்கிறார்.

“அவசர அரைபுரிதலுடன் அரசியல் பேசும் அறிவாளிகள்” என்ற தலைப்பில் அவர் எழுதியுள்ள பதிவு:

“முதலில் மெழுகுவத்தி ஏந்தி அன்னாஹஸாரே என்று உருகினார்கள், பிறகு துடைப்பக்கட்டையுடன் கெஜ்ரிவாலுக்கு கோஷமிட்டார்கள்; இப்போது சகாயம் முதல்வர் என்று முழங்குகிறார்கள்.
தலைமைப்பண்பு என்பது அதிரடி விளம்பர யுத்தியின் மூலம் வருவதல்ல.
ஆம் தமிழகத்தில் யோக்யமான தலைவர்கள் தற்போது யாருமில்லைதான்,
அதற்காக நல்ல சமையல் நிபுணரை வீடுகட்ட நியமிப்பது போலவா தேர்வு? திருட்டு மேஸ்திரியை கவனமாகக் கண்காணித்துத்தானே வேலை வாங்க வேண்டும்” என்று டாக்டர் ருத்ரன் எழுதியுள்ளார்.

More articles

Latest article