அகமதாபாத்: இந்தியாவிற்கு எதிரான 3வது மற்றும் பகலிரவு டெஸ்ட்டில், இங்கிலாந்தின் துவக்க வீரர் ஜாக் கிராலே அரைசதம் அடித்துள்ளார்.

டாம் சிப்லி மற்றும் பேர்ஸ்டோ இருவரும் டக்அவுட் ஆன நிலையில், அதைப்பற்றி அஞ்சாத கிராலே அதிரடியாக ஆடி வருகிறார். இதுவரை 73 பந்துகளை சந்தித்த ஜாக், 10 பவுண்டரிகளுடன் 52 ரன்களை அடித்துள்ளார்.

அவருடன் ஜோடி சேர்ந்துள்ள கேப்டன் ஜோ ரூட் சற்று நிதானமாக ஆடி வருகிறார். இந்த ஜோடியை இந்திய பந்து வீச்சாளர்கள் விரைவில் பிரிக்காவிட்டால், இங்கிலாந்து அணி களத்தில் நிலைத்து நிற்கும் அபாயம் ஏற்பட்டுவிடும். இந்தியா தரப்பில், அஸ்வின் சற்று தாமதமாக களமிறக்கப்பட்டுள்ளார்.