மராவதி’

ந்திர மாநில சட்டசபையில் இருந்து ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்துள்ளனர்.

இன்று ஆந்திர மாநில சட்டசபை கூட்டத்தொடர் தொடங்கியது. ஆளுநர் எஸ்அப்துல் நசீர் சட்டசபை மற்றும் சட்டமேலவை ஆகிய இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் உரையாற்றினார்.  அவர் உரையாற்ற தொடங்கியதும் எதிர்க்கட்சியான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் உறுப்பினர்கள் அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பி கடும் அமளியில் ஈடுபட்டனர்.

மேலும் அவர்கள்  எதிர்க்கட்சியினர் தொடர்ந்து தாக்கப்படுவதற்கு கண்டனம் தெரிவித்து கொலை செய்யும் அரசியலை நிறுத்த வேண்டும், ஜனநாயகத்தைக் காப்பாற்ற வேண்டும் என்று கோஷமிட்டனர். பிறகு ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் உறுப்பினர்கள் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையில் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

ஆந்திர அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினாகள் கருப்பு துண்டு அணிந்து சட்டசபைக்கு வந்திருந்தனர். கூட்டத்தொடரில் சட்டம் ஒழுங்கு, கலால் மற்றும் மாநில நிதி நிலைமை தொடர்பாக மூன்று வெள்ளை அறிக்கைகளை முதல்வர் சந்திரபாபு நாயுடு வெளியிட உள்ளார்.