டில்லி

ந்தியாவில் நேற்று 42,530 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,17,67,985 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 42,530 அதிகரித்து மொத்தம் 3,17,25,399 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 561 அதிகரித்து மொத்தம் 4,25,789 பேர் உயிர் இழந்துள்ளனர்.  நேற்று 39,304பேர் குணமாகி  இதுவரை 3,09,25,384 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது 4,04,262 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மகாராஷ்டிராவில் நேற்று 6,005 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 63,21,068 ஆகி உள்ளது  நேற்று 177 பேர் உயிர் இழந்து மொத்தம் 1,33,215 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 6,799 பேர் குணமடைந்து மொத்தம் 61,10,124 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 74,318 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கேரள மாநிலத்தில் நேற்று 26,676 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 34,49,149 ஆகி உள்ளது.  இதில் நேற்று 148 பேர் உயிர் இழந்து மொத்தம் 15,626 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 15,626 பேர் குணமடைந்து மொத்தம் 32,58,310 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 1,73,221 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கர்நாடகா மாநிலத்தில் நேற்று 1,674 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 29,09,958 ஆகி உள்ளது  இதில் நேற்று 38 பேர் உயிர் இழந்து மொத்தம் 36,650 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 1,376 பேர் குணமடைந்து மொத்தம் 28,49,003 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 24,280 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தமிழகத்தில் நேற்று 1,908 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 25,65,452 ஆகி உள்ளது  இதில் நேற்று 29 பேர் உயிர் இழந்து மொத்தம் 34,159 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 2,047 பேர் குணமடைந்து மொத்தம் 25,11,076 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 20,217 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

ஆந்திர பிரதேச மாநிலத்தில் நேற்று 1,546 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 19,71,554 ஆகி உள்ளது.  நேற்று 18 பேர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 13,428 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 1,940 பேர் குணமடைந்து மொத்தம் 19,37,956 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 20,217 பேர் சிகிச்சையில் உள்ளனர்.