டில்லி

ந்தியாவில் நேற்று 30,164 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,30,57,320 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 30,164 அதிகரித்து மொத்தம் 3,30,57,320 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 290 அதிகரித்து மொத்தம் 4,41,075 பேர் உயிர் இழந்துள்ளனர்.  நேற்று 42,946 பேர் குணமாகி  இதுவரை 3,22,17,462 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது 3,85,934 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மகாராஷ்டிராவில் நேற்று 3,626 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 64,89,800 ஆகி உள்ளது  நேற்று 37 பேர் உயிர் இழந்து மொத்தம் 1,37,811 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 5,988 பேர் குணமடைந்து மொத்தம் 63,00,755 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 47,695 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கேரள மாநிலத்தில் நேற்று 19,688 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 42,27,526 ஆகி உள்ளது.  இதில் நேற்று 135 பேர் உயிர் இழந்து மொத்தம் 21,631 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 28,561 பேர் குணமடைந்து மொத்தம் 39,66,557 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 2,38,816 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கர்நாடகா மாநிலத்தில் நேற்று 973 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 29,56,137 ஆகி உள்ளது  இதில் நேற்று 17 பேர் உயிர் இழந்து மொத்தம் 37,426 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 1,071 பேர் குணமடைந்து மொத்தம் 29,01,299 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 17,386 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தமிழகத்தில் நேற்று 1,556 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 26,24,234 ஆகி உள்ளது  இதில் நேற்று 18 பேர் உயிர் இழந்து மொத்தம் 35,036 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 1,564 பேர் குணமடைந்து மொத்தம் 25,72,942 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 16,256 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

ஆந்திர பிரதேச மாநிலத்தில் நேற்று 739 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 20,22,064 ஆகி உள்ளது.  நேற்று 14 பேர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 13,925 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 1,333 பேர் குணமடைந்து மொத்தம் 19,93,889 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 15,158 பேர் சிகிச்சையில் உள்ளனர்.