அமெரிக்க போர் கப்பல்கள் மீது ஏமனைச் சேர்ந்த ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது.

ஈரான் ஆதரவு ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது அமெரிக்கா மேற்கொண்ட நடவடிக்கைக்கு பதிலடியாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாகத் தெரிகிறது.

அமெரிக்க போர்கப்பல்களான USS Stockdale மற்றும் USS Spruance மீது எட்டு ஆளில்லா விமானங்கள், ஐந்து கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகள் மற்றும் மூன்று க்ரூஸ் ஏவுகணைகள் வீசப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்த ஏவுகணைகளை அமெரிக்க கடற்படை இடைமறித்து தாக்கியதாக பென்டகன் உறுதிப்படுத்தியுள்ளது.

பலமணி நேரம் நீடித்த இந்த தாக்குதலில் அமெரிக்க போர் கப்பல்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.