
வெங்கட கிருஷ்ண ரோகாந்த் இயக்கத்தில் விஜய் சேதுபதி, மேகா ஆகாஷ், மகிழ் திருமேனி, விவேக், இயக்குநர் மோகன்ராஜா, கனிகா உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’.
சந்திரா ஆர்ட்ஸ் நிறுவனம் சார்பில் இசக்கி துரை இந்தப் படத்தைத் தயாரித்து வருகிறார்.
இசையமைப்பாளராக நிவாஸ் கே பிரசன்னா, ஒளிப்பதிவாளராக மகேஷ் முத்துசுவாமி, கலை இயக்குநராக ஜான் பிரிட்டோ, எடிட்டராக சதீஷ் சூர்யா ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள்.
இந்நிலையில் தீபாவளியை முன்னிட்டு விஜய் சேதுபதி நடிப்பில் வெங்கடகிருஷ்ணன் ரோக்நாத் இயக்கத்தில் உருவாகிய ’யாதும் ஊரே யாவரும் கேளிர்’ படத்தின் புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர் படக்குழுவினர். இந்த படம் ரிலீசுக்கு தயாராகி ஒரு சில ஆண்டுகள் ஆகிய நிலையில் தற்போது இந்த படம் டிசம்பர் மாதம் ரிலீசாகும் என்று போஸ்டரில் குறிப்பிட்டுள்ளனர்.
[youtube-feed feed=1]Happy Diwali 🪔 #YaadhumOoreYaavarumKelir December Release.@ChandaraaArts @cineinnovations @EssakiduraiS @roghanth @akash_megha @raguaditya_ @Riythvika @jayam_mohanraja @Vetri_DOP @nivaskprasanna @AbrahamEditor @saregamasouth @onlynikil @CtcMediaboy pic.twitter.com/8I9tSDvC8k
— VijaySethupathi (@VijaySethuOffl) November 4, 2021