உலகில் அறியப்பட்ட மிகப் பழமையான காட்டுப் பறவையானது சுமார் 74 வயதில் ஒரு முட்டையை இட்டுள்ளது.

அல்பாட்ராஸ் இனத்தைச் சேர்ந்த லேசன் அல்பாட்ராஸ், பறவை ஒன்று நான்கு ஆண்டுகளுக்கு பிறகு ஹவாய் தீவில் உள்ள மிட்வே அடோல் தேசிய வனவிலங்கு சரணாலயத்தில் முட்டையிட்டுள்ளது.

விஸ்டம் என்று பெயரிடப்பட்ட இந்த பறவை தற்போது இட்டுள்ளது அதன் 60வது முட்டையாக இருக்கலாம் என்று பறவை ஆராய்ச்சி நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

நீண்ட சிறகுகள் கொண்ட லேசன் அல்பட்ரோஸ் கடற்பறவைகள் வாழ்நாள் முழுவதும் துணையுடன் இணைந்திருக்கும் அது வருடத்திற்கு ஒரு முட்டை இடும்.

அல்பட்ராஸ் பெற்றோர்கள் மாறி மாறி ஒரு முட்டையை ஏழு மாதங்கள் அடைகாக்கிறது. குஞ்சு பொரித்து ஐந்து முதல் ஆறு மாதங்களுக்குப் பிறகு கடலுக்குப் பறக்கும். இந்த பறவைகள் தங்கள் வாழ்நாளின் பெரும்பகுதியை கடலுக்கு மேல் பறந்து கணவாய் மற்றும் மீன் முட்டைகளை உண்கிறது.

விஸ்டம் முதன்முதலில் 1956 ஆம் ஆண்டில் ஒரு வயது பறவையாக இந்த சரணாயத்திற்கு வந்தது இதுவரை 30 குஞ்சுகளை பொரித்துள்ளது.

விஸ்டம் மற்றும் அதன் துணை பறவையான அகேகாமாய் உடன் சேர்ந்து முட்டையிட்டு வந்த நிலையில் 2006ம் ஆண்டுக்குப் பின் அகேகாமாயயைக் காணாததால் வேறு துணை பறவையுடன் வந்து செல்வதாக சரணாலய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வழக்கமாக லேசன் அல்பாட்ராஸ் இன பறவையின் ஆயுட்காலம் 68 ஆண்டுகள் என்றபோதும் தற்போது 74 வயதாகும் விஸ்டம் ஒரு முட்டையை இட்டிருக்கும் நிலையில் அது குஞ்சு பொரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.